நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுயசார்பு பாரதத் திட்டத்தின் கீழ் விலையில்லா உணவு தானியம்

Posted On: 16 MAY 2020 8:00PM by PIB Chennai

நாடு முழுவதும் புலம் பெயர்ந்த 8 கோடி தொழிலாளர்களுக்கு பாரதப் பிரதமர் அறிவித்த சுயசார்பு பாரத தொகுப்பு திட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டு மே, ஜூன் ஆகிய மாதங்களில் குடும்பத்துக்குத் தலா 5 கிலோ விலையில்லா உணவு தானியம் வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், மாநில பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருக்காத தொழிலாளர்களுக்கு இந்த உணவு தானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த மொத்தம் ரூ. 3,500 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும். இதற்காக அகில இந்திய உணவு தானிய ஒதுக்கீட்டில் 8 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் உணவு தானியத்தை வழங்கும் பணியை இந்திய உணவுக் கழகம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சார்ந்த மாநிலங்களுக்காக தமிழகம் இன்று மே 16 ம் தேதி 1,109 மெட்ரிக் டன் அரிசியை அளித்துள்ளது. அதைப் போல், கேரளம் 151 மெட்ரிக் டன் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உணவு தானியத்தை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. எந்த மாநிலத்தின் மற்றும் பிரதேசங்களின் தேவையையும் ஈடு செய்வதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் போதுமான தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் எந்தப் பகுதியின் தேவைக்கு ஈடு செய்வதற்காக போதுமான இருப்பு அந்தமான், லட்சத் தீவு உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள 2122 பொருள் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவு தானியம் தேவைப்படும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரயில், சாலை மார்க்கவும் கடல் வழியாகவும் வழங்கி தேவை இருப்பு நிரப்பப்படுகின்றன.

*****(Release ID: 1624743) Visitor Counter : 206