நிதி அமைச்சகம்

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (32 மகா ரத்னா மற்றும் நவரத்னா நிறுவனங்கள்) எம்.எஸ்.எம்.இ-க்கான பணப் பட்டுவாடா

Posted On: 15 MAY 2020 6:08PM by PIB Chennai

நாட்டில் உள்ள 32 மகாரத்னா மற்றும் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களின் செயல் திறனை மாதாந்திர அடிப்படையில் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை கண்காணித்து வருகிறது. அவற்றின் மூலதனச் செலவு மற்றும் வர்த்தகர்களுக்கான நிலுவைத்தொகை, அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் 2019ல் இருந்து எம்.எஸ்.எம்.இ விற்பனையாளர்களுக்கான நிலுவைத் தொகை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மறுஆய்வு செய்யப்படுகிறது.

முதலீட்டுச் சுழற்சிக்கு உந்துதல் தரும் என்பதால் வழக்கமான பட்டுவாடாக்கள் விரைவாக பைசல் செய்யப்படுவதை சி.பி.எஸ்.இ-க்கள் உறுதி செய்ய வேண்டும் என தெளிவான வழிகாட்டு அறிவுறுத்தல்கள் தரப்பட்டு உள்ளன.  எம்.எஸ்.எம்.இ-க்களின் நிலுவையை பைசல் செய்வதற்கு சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறையின் சமதான் போர்ட்டலில் உள்ள புகார்கள் தீர்க்கப்பட்டாக வேண்டும். சிபிஎஸ்இ-க்களின் பட்டுவாடா நிலுவையை கண்காணிக்குமாறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுக்கு ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் செலவினத் துறையின் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.



(Release ID: 1624420) Visitor Counter : 374