இந்திய போட்டிகள் ஆணையம்
நிறுவனங்களின் இணைப்பை ஒழுங்குமுறைப்படுத்துவதன் கீழ் போட்டியிடக்கூடாத நிலைக்கான கட்டுப்பாடுகளை பரிசீலனை செய்ய பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கிறது சி.சி.ஐ
Posted On:
15 MAY 2020 9:18PM by PIB Chennai
இந்திய சந்தைப்போட்டி ஆணையம் (சி.சி.ஐ) நிறுவனங்கள் ஒருங்கிணைவதை மீளாய்வு செய்யும் போது இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் எழுகின்ற போட்டியிடக்கூடாத நிலைக்கான கட்டுப்பாடுகளை பரிசீலனை செய்து வருகிறது. அறிவிக்கை செய்யப்பட்ட தரப்பினர் ஆணையத்தின் பரிசீலனைக்காக போட்டியிடக்கூடாத நிலைக்கான கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களை தெரிவித்தாக வேண்டும். போட்டியிடக்கூடாத நிலைக்கான கட்டுப்பாடுகளை ”துணைநிலை” அல்லது ”துணைநிலை அல்லாத” என்று கருதுவதற்கான சூழல்களை விளக்கி சி.சி.ஐ வழிகாட்டி குறிப்புரையை வழங்கி உள்ளது. நற்பெயர் உரிமை மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை மாற்றும் போது போட்டியிடக்கூடாத பொறுப்புடைமையை 3 ஆண்டுகளுக்கு பொதுவாக கடைபிடிக்கலாம் என்றும் நற்பெயர் உரிமையை மட்டுமே மாற்றும் போது 2 ஆண்டுகளுக்கு கடைபிடிக்கலாம் என்றும் வழிகாட்டி குறிப்புரையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் விற்கப்பட்ட வணிகம் மட்டும் சார்ந்ததாகவும் வணிகம் நடைபெறும் நில எல்லைக்கு உட்பட்டதாகவும் போட்டியிடக்கூடாத கட்டுப்பாடுகளின் வரம்பு இருக்க வேண்டும் என்றும் குறிப்புரையானது மேலும் தெரிவிக்கிறது. கட்டுப்பாடுகள் துணைநிலை அல்லாதவையாக இருக்கும் போது சட்டத்தின் ஷரத்துகளின் கீழ் எந்த ஒரு மீறலையும் அவை எழுப்பவில்லை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
நிறுவனங்களின் இணைப்புக்கான ஒழுங்கு முறைகள் திருத்தம் குறித்த வரைவு அறிக்கையின் நகல் சி.சி.ஐ வலைத்தளத்தில் "https://pib.gov.in/www.cci.gov.in" படிக்கக் கிடைக்கிறது. இது குறித்த பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துக்களை ஜுன் 15 க்குள் combination.cci[at]nic[dot]in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
(Release ID: 1624416)
Visitor Counter : 259