பாதுகாப்பு அமைச்சகம்

எம்கே-4, இந்தியக் கடற்படையில் “ஐஎன்எல்சியு எல்57” கப்பல் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் கடற்படைத் தளபதி தொடக்கம்

Posted On: 15 MAY 2020 4:24PM by PIB Chennai

இந்தியக் கடற்படையில் “ஐஎன்எல்சியு எல் 57”  என்ற நவீன ரக கப்பல் சேர்க்கப்பட்டது. இதற்காக அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில்    மே 15 வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியக் கடற்படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜேஸ்வர், பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், விஎஸ்எம், ஏடிசி தொடங்கிவைத்தார்.

அந்தமானில் இயக்கப்பட்ட “ஐஎன்எல்சியு எல் 57” இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும் ஏழாவது கப்பல் ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. கோல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே முழுதும் உற்பத்தி செய்யப்பட்டது. இது உள்நாட்டிலேயே கப்பல் கட்டும் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இந்தக் கப்பல் ஆயுதங்கள், தளவாடங்கள், பீரங்கிகளை ஏற்றிச் செல்வதற்கும் போர்க் காலங்களில் பயன்படுத்தவும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தமானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த வகையான கப்பல்கள் கடலில் தேடுதல் பணிகள், பேரிடர்க் காலங்களில் பாதிக்கப்பட்டோரை அப்புறப்படுத்தி, பாதுகாப்பாக ஏற்றுச் செல்வது ஆகிய பணிகளையும் மேற்கொள்ளும்.



(Release ID: 1624393) Visitor Counter : 170