அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் “இன்ஸ்பையர்” திட்ட பேராசிரியர் ஈயத்தால் ஆன பேட்டரிகளுக்கு பதிலாக இலகுரக கார்பன் நுரையை உருவாக்கியுள்ளார்

Posted On: 15 MAY 2020 12:13PM by PIB Chennai

போபாலில் உள்ள அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையத்தின் மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜீவ் குமார், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிறுவப்பட்ட புதுமை நோக்கத்திற்கான அறிவியல் ஆராய்ச்சி திட்டம்  இன்ஸ்பையர்”  ஆசிரிய விருதைப் பெற்றவர். இவர், ஈய-அமில பேட்டரிகளில் உள்ள ஈய கட்டத்தை மாற்றும் ஆற்றலைக் கொண்ட நுண்ணிய கார்பன் பொருட்களை உருவாக்கி வருகிறார்.

அதிக வலிமையுடைய மின்னணுவியலில் வெப்ப பரிமாற்றத்திற்காகவும், விண்வெளியில் மின்காந்த குறுக்கீடு கவசத்திற்காகவும், ஹைட்ரஜன் சேமிப்பிற்காகவும், ஈய - அமில பேட்டரிகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு கருவிகளுக்கான மின் முனையாகவும்,ந்த பொருள் பயனுள்ளதாக இருக்கும்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0011RX6.jpg

படம்: டாக்டர் ராஜீவ் குமார்,    இலகுரக கார்பன் நுரை பிரிவு

 

"இந்த மூலபொருட்கள் இணைப்பின் மூலம், மேம்பட்ட பண்புகளுடன் கார்பன் நுரை உருவாக்கியுள்ளோம். வாகனங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஈய-அமில பேட்டரிகள் போன்ற ஆற்றல் சேமிப்பு முறையை நாங்கள் கடுமையாக நம்பியுள்ளோம். இலகுரக கார்பன் நுரை, ஈய-அமில பேட்டரிகளை மாற்றும் திறன் கொண்டது. ஏனெனில் ஈய-அமில பேட்டரிகள் கனமானவை, அரித்து போக கூடியவை மற்றும் மோசமான வெப்ப நிலைத்தன்மையைக் கொண்டுள்ளவையாகும்” என்று டாக்டர் ராஜீவ் குமார் விளக்கினார்.

 

இன்ஸ்பையர்” கூட்டுறவின் கீழ் உருவாக்கப்பட்ட கார்பன் நுரை, அசுத்தமான நீரிலிருந்து ஆர்சனிக், எண்ணெய் மற்றும் பிற உலோகங்களை அகற்றுவதற்கும் செலவு குறைந்ததாக இருக்கும். இந்த கார்பன் நுரைகள் நச்சுத்தன்மையற்றவை, உருவாக்க எளிதானவை, மலிவானவை மற்றும் தண்ணீரில் கரையாதவை. கார்பன் நுரை தயாரிப்பதற்கான மூலப்பொருள் எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கிறது, மேலும், கார்பன் நுரை உருவாக்கவும், வடிகட்டுவதற்கும் எந்தவொரு விலையுயர்ந்த கருவியும் தேவையில்லை. மின்சாரம் பற்றாக்குறை உள்ள தொலைதூர பகுதிகளில் இத்தகைய பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

 

மேலும் கூடுதல் விவரங்களுக்கு டாக்டர் ராஜீவ் குமார் kumarrajeev4[at]gmail[dot]com, தொலைபேசி 07838352624 தொடர்பு கொள்ளவும்

***************



(Release ID: 1624160) Visitor Counter : 200