அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 தொற்று காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூகப் பொருளாதாரப் புத்தாக்கம் மற்றும் விரிதிறன் முன்முயற்சிகளில் அறிவுசார் அமைப்புகள் கவனம் செலுத்துகின்றன

Posted On: 13 MAY 2020 6:34PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள  அறிவுசார் அமைப்புகள் , சமூக, அச்சு, மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்தி கொவிட்-19 குறித்த அறிவியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் அறிவியல் சமூகப் பொறுப்புடைமையின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலின்படி, ஊரடங்கு காலத்திலும், அதற்குப் பின்னரும், சமூக அளவில் விரிவாற்றலைக் கட்டமைக்கும் முன்முயற்சிகளை அவை தொடங்கியுள்ளன.

புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழக்கமான அறிவுரைகளை கைபேசி செயலி ஒன்றின் மூலம் தெரிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடைமுறைத் திட்டங்களின் மூலம், பண்ணை விலங்குகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் தொலைமருந்து வசதியை ஶ்ரீநகர், ஷெர்-இ- காஷ்மீர் விவசாய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. மூச்சுத்திணறல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, ஆயுர்வேத முறையிலான மூலிகை மூக்கடைப்பு நீக்கத் தெளிப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடரும் விதமாக, 5000 லிட்டருக்கும் அதிகமாக புதுதில்லி எய்ம்ஸ், சப்தர்ஜங் ஆகிய இடங்களில் உள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கும், ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேச மாநிலக் காவல் துறைக்கும் கிருமிநாசினி விநியோகிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதியுதவியின் கீழ், கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை கிருமிநாசினித் தொழில்நுட்பம், அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டுப்படியான விலையில், பொதுமக்களின் நுகர்வுக்காக, நீடித்த விநியோகத்துக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் அளவில் தன்னார்வ அமைப்புகள் இதனை விநியோகிப்பதற்கான விதிமுறைகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. 

(மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்- டாக்டர் ராஷ்மி சர்மா, விஞ்ஞானி-இ, DST, மின்னஞ்சல் r.sharma72[at]nic[dot]in, தொலைபேசி எண் Mob No +91-9971538681)



(Release ID: 1623820) Visitor Counter : 164