விவசாயத்துறை அமைச்சகம்
பொது முடக்கத்தின் போது பருப்புகள் மற்றும் எண்ணை வித்துக்களின் கொள்முதல் தொடர்கிறது
Posted On:
13 MAY 2020 6:48PM by PIB Chennai
பொது முடக்கத்தின் போது விவசாயிகளையும், வேளாண் நடவடிக்கைகளையும் கள அளவில் ஊக்குவிக்க, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய அரசின் வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய வேளாண், விவசாயிகள் நலன் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறார்.
1. பொது முடக்கத்தின் போது தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பால் (NAFED) கொள்முதல் செய்யப்பட்ட பயிர்களின் நிலவரம்:
* ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய 9 மாநிலங்களில் இருந்து 3.7 இலட்சம் மெட்ரிக் டன் பருப்பு (சென்னா) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநிலங்களில் இருந்து 3.67 இலட்சம் டன் கடுகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 1.86 இலட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2. 2020-21 ரபி சந்தைப்படுத்துதல் பருவத்தில், மொத்தம் 277.38 மெட்ரிக் டன் கோதுமை இந்திய உணவுக் கழகத்துக்கு வந்தடைந்தது. இதில், 268.90 மெட்ரிக் டன் வாங்கப்பட்டது.
3. 2020-21 ரபி பருவத்தில், ரபி பருப்புகள் மற்றும் எண்ணை வித்துக்களுக்காக 11 மாநிலங்களில் மொத்தம் 3208 நியமிக்கப்பட்ட கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
4. பிரதமர்-கிஸான்:
24.3.2020 முதல் இன்று வரையிலான பொது முடக்க சமயத்தில், சுமார் 9.25 கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடைந்துள்ளன, மற்றும் ரூ 18,517 கோடி இது வரை வெளியிடப்பட்டுள்ளது.
(Release ID: 1623813)
Visitor Counter : 197