ரெயில்வே அமைச்சகம்

12 மே, 2020இல் இருந்து பயணிகள் சேவையை இந்திய ரயில்வே படிப்படியாகத் தொடங்கும்.

Posted On: 11 MAY 2020 4:25PM by PIB Chennai

சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசித்தப் பின்னர் 12 மே, 2020இல் இருந்து படிப்படியாக பயணிகள் சேவையை இந்திய ரயில்வேயில் தொடங்குவதென ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி (சுட்டி கீழே வழங்கப்பட்டுள்ளது), பதினைந்து ஜோடி சிறப்பு ரயில்கள் (முப்பது ரயில்கள்) இயக்கப்படும்.

 

1 மே, 2020இல் இருந்து சிக்கித் தவிப்பவர்களின் பயணத்துக்காக இயக்கப்படும் ஷ்ராமிக் சிறப்பு வண்டிகளில்லாமல், இந்த சேவைகளும் கூடுதலாக வழங்கப்படும்.

 

மெயில்/விரைவு வண்டி, பயணிகள் மற்றும் புறநகர் உட்பட இதர வழக்கமான பயணிகள் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருக்கும்.

 

முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதிப் பெட்டிகள் மட்டுமே தற்போதுத் தொடங்கப்படும் சிறப்பு ரயில்களில் இருக்கும். வழக்கமாக அட்டவணையிடப்படும் ராஜ்தானி ரயில்களின் பயணக் கட்டண விகிதம் இந்த சிறப்பு ரயில்களுக்குப் பொருந்தும் (உணவு விலைகள் சேர்க்காமல்).

 

IRCTC வலைதளம் அல்லது கைபேசி செயலி மூலமாக ஆன்லைன் மின்-பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும். எந்த ரயில் நிலையத்திலும் முன்பதிவு மையத்தில் இதற்கான பயணச்சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது. முகவர்கள் மூலம் (IRCTC மற்றும் ரயில்வே முகவர்கள்) பயணச் சீட்டு வாங்குவது அனுமதிக்கப்பட மாட்டாது. அதிகபட்சம் 7 நாட்கள் மட்டுமே அதிகபட்ச முன்பதிவு காலமாக இருக்கும்.

 

உறுதி செய்யப்பட்ட மின்-பயணச்சீட்டுகள் மட்டுமே வாங்க முடியும். இரத்து செய்யப்படுபவைகளுக்கு எதிரான முன்பதிவு (RAC) / காத்திருப்பு பட்டியல் பயணச்சீட்டு (Waiting List),  வண்டியில் ஏறிய பின் பயணச்சீட்டு பரிசோதகர் மூலம் பயணச்சீட்டு வாங்குதல் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது. உடனடி பதிவு, தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறைகளும் அனுமதிக்கப்பட மாட்டடாது. முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளும் (UTS) அனுமதிக்கப்பட மாட்டடாது.

 

இந்தக் கட்டணத்தில் உணவு விலைகள் சேர்க்கப்பட மாட்டாது. உணவுக்காக முன்கூட்டியே பணம் கட்டும் வசதி மற்றும் மின்-உணவு ஆகியவை செயல்படுத்தப்பட மாட்டாது. ஆனால், அளவான உணவு வகைகளுக்கும், பேக் செய்யப்பட்ட குடிநீருக்கும் கட்டண முறையில் IRCTC வசதி செய்துத் தரும். பயணச்சீட்டை பதிவு செய்யும் போது இதைப் பற்றிய தகவல்கள் பயணிகளுக்கு அளிக்கப்படும்.

 

தங்களது சொந்த உணவு மற்றும் தண்ணீரை எடுத்து செல்ல பயணிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். உலர்ந்த, உண்ணத் தயாரக உள்ள உணவுக்ள் மற்றும் பாட்டில் தண்ணீர், கேட்கும் போது கட்டண முறையில் ரயில்களுக்குள் தரப்படும்.

 

அனைத்து பயணிகளும் கட்டாயம் பரிசோதிக்கப்பட்டு, அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே ரயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

இந்த சிறப்பு ரயில்களில் பயணிப்போர் கீழ்கண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்:

 

() உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

 

() உள்ளே நுழையும் போதும், பயணத்தின் போதும் அனைத்து பயணிகளும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.

 

() நிலையத்தில் வெப்ப மானி பரிசோதனை செய்து கொள்ள வசதியாக பயண நேரத்துக்கு 90 நிமிடங்கள் முன்பாகவே பயணிகள் நிலையத்துக்கு வந்து விட வேண்டும். அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

 

() தங்களது சேருமிடத்தை அடைந்தவுடன், சம்பந்தப்பட்ட மாநிலம்/யூனியன் பிரதேசம் வலியுறுத்தும் சுகாதார நெறிமுறைகளைப் பயணிகள் பின்பற்ற வேண்டும்.

 

பயணச்சீட்டை ஆன்லைனில் ரத்து செய்வது ரயிலின் புறப்படும் நேரத்துக்கு 24 மணி நேரம் முன்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படும். ரயில் புறப்படும் நேரத்துக்கு 24 மணி நேரத்துக்கு குறைவாக எந்த ரத்து செய்தலும் அனுமதிக்கப்பட மாட்டாது. பயணச் சீட்டுக் கட்டணத்தில் 50 சதவீதம் ரத்து செய்வதற்கான கட்டணமாக இருக்கும்.

 

பயணிகள் நேருக்கு நேர் வருவதைத் தடுக்க, ரயில் நிலையங்களில் பயணிகள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகள் இருப்பதை முடிந்த அளவு உறுதி செய்யுமாறு பிராந்திய ரயில்வேக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நிலையான தனி நபர் இடைவெளி வழிகாட்டுதல்களை நிலையங்களிலும், ரயில்களிலும் பின்பற்றி பாதுகாப்பு, காவல் மற்றும் சுகாதார நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பிராந்திய ரயில்வேக்கள் வலியுறுத்தபப்டும்.

 

ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அனைத்து பயணிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

கம்பளி, போர்வைகள் மற்றும் திரைச்சீலைகள் ரயிலுக்குள் தரப்பட மாட்டாது. பயணத்துக்கு தங்கள் சொந்தக் கம்பளிகளை எடுத்து வருமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். குளிர்பதனப் பெட்டிகளில் நிலைமைக்கேற்றபடி தட்பவெட்பம் கட்டுப்படுத்தப்படும்.

 

பிளாட்பாரங்களில் கடைகள்/விற்பனை மையங்கள் திறந்திருக்காது. ரயில்களுக்கு அருகிலும் எதுவும் விறக்கப்பட மாட்டாது. மிதமான சுமைகளோடு பயணம் செய்ய பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி, பயணிகளின் போக்குவரத்தும், அவர்களை ரயில் நிலையத்துக்கும், ரயில் நிலையத்தில் இருந்தும் அழைத்து செல்லும் ஓட்டுநரின் போக்குவரத்தும் உறுதிப்படுத்தப்பட்ட மின் பயணச்சீட்டை பொறுத்தே அனுமதிக்கப்படும்.

***


(Release ID: 1623044) Visitor Counter : 362