சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று பரவலை கண்காணிப்பதில் புனே ஐசிஎம்ஆர்-என்ஐவி அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்துள்ள எல்ஜிஜி எலிசா பரிசோதனை கருவி முக்கியப் பங்கு வகிக்கும்: டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்

Posted On: 10 MAY 2020 8:07PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று குறித்த ஆன்டிபாடிகளை கண்டறிவதற்காக கோவிட் கவாச் எலிசாஎன்ற ஐஜிஜி எலிசா பரிசோதனை கருவியை உள்நாட்டிலேயே புனே-வில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகளும் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் திணறி வருகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நாடுகளுக்கும் பல்வேறு வகையான பரிசோதனை கருவிகள் தேவைப்படுகின்றன. இந்தியாவுக்கு கோவிட்-19- தொற்றுக்கான பெரும்பாலான பரிசோதனை கருவிகள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, கோவிட்-19 என்ற சார்ஸ்-கோவ்-2-க்கு பரிசோதனை செய்வதற்கான கருவியை உள்நாட்டிலேயே உருவாக்குவதில் இந்திய விஞ்ஞானிகள் ஓய்வில்லாமல் முனைப்பு காட்டி வருகின்றனர்.

நாட்டிலேயே வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றதுடன், அதிநவீன கட்டமைப்புகள் கொண்ட தலைமை ஆய்வகமாக புனே-வில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில் ஆய்வகங்களில் உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளிடமிருந்து சார்ஸ்-கோவ்-2 வைரஸை தனிமைப் படுத்துவதில் தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் தலைசிறந்த விஞ்ஞானிகள் குழு வெற்றி கண்டுள்ளது. இதுவே, சார்ஸ்-கோவ்-2-வுக்கான பரிசோதனை கருவியை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு வழிவகை செய்துள்ளது.

புனே ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் ஆர்வமுடன் பணியாற்றி, சார்ஸ்-கோவ்-2-வுக்கான ஆன்டிபாடிகளை கண்டறிவதற்கு முற்றிலும் உள்நாட்டிலேயே ஐஜிஜி எலிசா  பரிசோதனை கருவிகளை உருவாக்கி, அதன் செயல்பாடுகளை உறுதி செய்துள்ளனர். மும்பையில் உள்ள இரண்டு இடங்களில் இந்த கருவியை வைத்து சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம், மிகவும் சிறந்த முறையிலும், குறிப்பிட்ட வகையிலும் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, ஒரே முறையில் இரண்டரை மணி நேரத்துக்கு 90 மாதிரிகளை ஒன்றாக பரிசோதனை செய்யும் திறனையும் இந்த கருவி பெற்றுள்ளது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், ஆன்டிபாடிகளை கண்டறிவதற்காக புனேவில் உள்ள         ஐ சி எம் ஆர்என் ஐ வி-யால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வலுவான ஐஜிஜி எலிசா பரிசோதனை கருவியானது, மக்கள் தொகையில் எந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.

எலிசா பரிசோதனை கருவிகளை மிகப்பெரும் அளவில் தயாரிப்பதற்கு ஜிடஸ் காடிலா  நிறுவனத்துடன் ஐசிம்ஆர் இணைந்துள்ளது. புனே-வில் உள்ள ஐ சி எம் ஆர் – என் ஐ வி உருவாக்கிய இந்த தொழில்நுட்பம், மிகப்பெரும் அளவில் உற்பத்தி செய்வதற்காக புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனமான ஜிடஸ் காடிலா-விடம் வழங்கப்பட்டுள்ளது.

*****


 

 (Release ID: 1623006) Visitor Counter : 323