ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
கோவிட் 19 நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பல சவால்கள் இருந்தபோதிலும் என். பி. கே (NPK) உரங்கள் சுஃபாலா விற்பனையில் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது: RCF சாதனை.
Posted On:
09 MAY 2020 4:03PM by PIB Chennai
கோவிட்-19 நோய் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பிற சவால்கள் பல இருந்தபோதிலும், மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ராஷ்ட்ரிய இரசாயன உர நிறுவனம் (RCF) தனது என்.பி.கே உரங்கள் சுஃபாலா விற்பனையில் சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுஃபாலா விற்பனை 35.47 சதவீதம் அதிகரித்துள்ளது.
விவசாயிகள், உயர் விளைச்சலின் பலன்களைப் பெறும் வண்ணம், விவசாய ஊட்டச்சத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உற்சாகத்துடன் பங்காற்றுவதற்காக RCF க்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. டி வி சதானந்த கவுடா பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தினால் நேரிடும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு இந்திய விவசாயிகளுக்கு உதவுவதற்காக, தமது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பொதுப்பணித் துறை உர அமைப்புகள் கடினமாக உழைத்து வருவது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.
விதைப்புப் பருவத்தின் போது, உரங்களின் உற்பத்தி, போக்குவரத்து, விநியோகம் ஆகியவை தங்கு தடையின்றி நடைபெறுவதற்காக, தம்முடைய உரங்கள் துறை அமைச்சகம் தவிர, தாமும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வேளாண்துறை அமைச்சர்களுடனும், மத்திய/மாநில சம்பந்தப்பட்ட இதர துறைகளுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் திரு கவுடா கூறினார்.
(Release ID: 1622557)
Visitor Counter : 213
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada