நிதி அமைச்சகம்

தங்கப் பத்திரத் திட்டம் (2020-2021) இரண்டாவது வெளியீடு

Posted On: 08 MAY 2020 8:17PM by PIB Chennai

மத்திய அரசு ஏற்கெனவே கடந்த 2019, ஏப்ரல் 13ம் தேதியிட்ட அரசாணை எண். F.No.4(4)- பி /( டபிள்யு &எம் வி ) அடிப்படையில் 2020-21ம் ஆண்டுக்கான தங்கப் பத்திரங்களை வரும் 2020, மே 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை சந்தையில் வெளியிடுகிறது. அதற்கான தீர்வு மே 19ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தாக் காலத்தில் கடன் பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ. 4590 (ரூபாய் நான்காயிரத்து ஐந்நூற்று தொண்ணூறு) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் இந்திய ரிசர்வ் வங்கி மே 8ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து, ஆன்லைன் மூலம் பதிவு செய்து டிஜிட்டல் வழியாக பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு  இந்த விலையில் ரூ. 50 (ரூபாய் ஐம்பது) சலுகை தருவது என முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு இதன் விலை ஒரு கிராமுக்கு ரூ. 4540 (ரூபாய் நான்காயிரத்து ஐந்நூற்று நாற்பது) என்ற விலைக்கு விற்கப்படும்.


(Release ID: 1622421) Visitor Counter : 100