உள்துறை அமைச்சகம்
அமித் ஷா தலைமையில் அனைத்து மத்திய ஆயுத காவல் படை தலைமை இயக்குநர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்
Posted On:
08 MAY 2020 9:20PM by PIB Chennai
அனைத்து மத்திய காவல் படை தலைமை இயக்குநர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை வகித்தார். கோவிட் 19 தொற்றினைச் சமாளிக்க அனைத்து ஆயுதப் படையினரும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “மோடி தலையமையிலான மத்திய அரசு கோவிட் 19 தொற்று பரவிவருவது குறித்து கவலை தெரிவிப்பதுடன், மத்திய ஆயுதப் படை போலீசாரின் பாதுகாப்பு, உடல் நலம் ஆகியவற்றை உறுதி செய்வதிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது” என்று கூறினார். மத்திய ஆயுதப் காவல் படைப் பிரிவுகளில் பாதிப்புக்கு ஆளான ஒவ்வொரு வீரர்களின் நிலைமை குறித்தும் தொற்று அறிகுறியில்லாமல் உள்ளவர்கள் குறித்தும் அமித் ஷா கேட்டு அறிந்தார்.
கோவிட் 19 தொற்று ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் பணிகளை நினைவுகூர்ந்த உள்துறை அமைச்சர், பாதிப்பால் உயிரிழக்க நேருவோர், குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு உரிய பலன்கள், பணிக்கொடை, காப்பீட்டுத் தொகை ஆகியவை சரியான தருணத்தில் கிடைக்க வகை செய்யும்படி மூத்த அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அத்துடன் படை வீரர்களின் உடல்நலப் பரிசோதனைகள், சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யும் படியும் கேட்டுக் கொண்ட அவர், கோவிட் 19 தொற்றுக்கு ஆளான மத்திய ஆயுத போலீஸ் படையினருக்காகவே தனியாக மருத்துவமனை வசதியையும் அமைக்கும்படியும் நோய் கண்டறிதல், பரிசோதனை ஆகியவற்றை அதிகரிக்கும்படியும் உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
(Release ID: 1622420)
Visitor Counter : 170