சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

கைலாஷ்-மானசரோவர் யாத்திரை வழித்தடத்தில் தர்ச்சுலாவிலிருந்து லிபுலேக் (சீன எல்லை) வரை சாலைப் பணிகள் நிறைவடைந்ததற்கு கட்கரி பாராட்டு.

Posted On: 08 MAY 2020 4:51PM by PIB Chennai

புகழ்பெற்ற கைலாஷ் - மனாசரோவர் யாத்திரை வழித்தடத்தில், தர்ச்சுலாவிலிருந்து லிபுலேக்( சீன எல்லை) வரை சாலைத்தொடர்புப் பணியை நிறைவு செய்த எல்லை சாலைகள் அமைப்பின் முயற்சியை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி பாராட்டியுள்ளார். இந்தச் சாலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், காணொளிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்து, பித்தோரகாரிலிருந்து முதல் வாகனத் தொகுதி செல்வதற்குக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எல்லைப்புறக் கிராமங்கள் முதன்முதலாக சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளதாக திரு. கட்கரி கூறினார். இதனால், கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் மிகச் சிரமமான 90 கி.மீ பயணத்தைத் தவிர்த்து சீன எல்லை வரை தற்போது வாகனங்கள் மூலம் செல்ல முடியும் என்று அவர் கூறினார்.



(Release ID: 1622207) Visitor Counter : 135