குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

தென்னை நார் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் உதவ, கயிறு வாரியம் சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தினை இணைத்துக்கொண்டுள்ளது.

Posted On: 07 MAY 2020 4:14PM by PIB Chennai

"தென்னை நாரைத் தனியாகவோ அல்லது இதர இயற்க்கை நார்களுடன் இணைத்தோ பயன்படுத்துவதற்கான மீச்சிறப்பு மையம் " அமைப்பதற்கு கயிறு வாரியம் சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது. மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தென்னை நார் புவி-ஜவுளி (சிஜிடி) குறித்து கயிறு வாரியமும் இதர அமைப்புகளும் மேற்கொண்ட ஆய்வுகளை,  சென்னை இந்தியத்
தொழில் நுட்பக் கழகம் மதிப்பீடு செய்து, சிஜிடி பொருட்களை  சரிவுகள்
/நீர்நிலைக் கரைகள், ஆற்றங்கரைகள் ஆகியவற்றில் மண் சரிவுகளைத்
தடுக்கவும், சுரங்க மண் குவியல் சரிவுகளைச் நிலைப்படுத்தவும்
வெற்றிகரமாகப்  பயன்படுத்தலாம் எனப் பரிந்துரை செய்தது. குறைந்த கொள்ளளவு ஊரகச் சாலைகளில் உறுதிப்படுத்தும் பொருளாகவும் சிஜிடி-ஐப் பயன்படுத்தலாம்
என்றும் பரிந்துரை செய்தது.

இந்த மீச்சிறப்பு மையத்தை உருவாக்கி நடத்த கயிறு வாரியம்
தொடக்கத்தில் இரண்டாண்டு காலத்திற்கு ரூ.5 கோடி நிதி உதவியை  வழங்கும்.


 



(Release ID: 1621890) Visitor Counter : 138