வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நாசிக் பொலிவுறு நகரம் கைபேசி செயலிகள் மற்றும் உடல் கிருமிநாசினி எந்திரங்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம் கொவிட்-19க்கு எதிரான நகரத்தின் போராட்டத்துக்கு வலு சேர்த்துள்ளது.

Posted On: 07 MAY 2020 4:47PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் நாசிக் மாநகராட்சி ஏராளமான முன்முயற்சிகளை எடுத்துள்ளது. அவற்றில் நகர அளவில் எடுக்கப்பட்ட சில முக்கிய முன்முயற்சிகள் வருமாறு;

எட்டு டிராக்டர்கள், 13 பம்புகள் மூலம் (75 கி.மீ தூரத்துக்கு) 36 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள பல்வேறு நாசிக் மாநகராட்சி அலுவலகங்கள், நகரம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில், சோடியம் ஹைப்போகுளோரைட் தெளிக்கப்பட்டது. மேலும், 37.5 சதுர மீட்டர் குறுக்காகவும், 109 கி.மீ தூரத்துக்கு நகரம் முழுவதும் 287 மலேரியா பணியாளர்களால், பூச்சி மருந்துகள் மற்றும் புகை மருந்துகள் தெளிப்பான்கள் மூலம் அடிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து கழிவுகள் மற்றும் குப்பைகளை மாநகர சுகாதாரப் பணியாளர்கள் தனியாக வீடு, வீடாகச் சென்று பெற்று வருகின்றனர்.

748 மருத்துவ அதிகாரிகள் , 1500 சுகாதாரப் பணியாளர்களுக்கு, கையுறைகள், முகக்கவசங்கள், கை சுத்தம் செய்யும் கிருமிநாசினிகள் மற்றும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்காக நகரம் முழுவதும் 14 நிறுவன தனிமை வார்டுகள் திட்டமிடப்பட்டு, வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் இதுவரை மொத்தம் 72 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கோவிந்த் நகர், ஆனந்த் வல்லி, நாசிக் சாலை ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்காக, மருத்துவர்கள், முறையே 22, 12, மற்றும் 11 சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 8000-க்கும் அதிகமானோருக்கு மருத்துவ அதிகாரிகள் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.



(Release ID: 1621886) Visitor Counter : 212