அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்19 தொற்று கண்டறியும் தொழில்நுட்பம்: சி எஸ் ஐ ஆர் - ஐ ஜி ஐ பி நிறுவனத்துடன் டாடா நிறுவனம் உடன்பாடு

प्रविष्टि तिथि: 05 MAY 2020 7:18PM by PIB Chennai

கோவிட் 19 தொற்றினை உடனே கண்டறியும் கருவிக்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிவதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்கள் ஆராய்ச்சிக் குழுவின் ஆய்வகமான மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனமும்  டாடா சன்ஸ் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

இந்த உடன்பாட்டின் கீழ் ஃபெலுடா எனப்படும் கருவித் தொழில்நுட்பத்தை டாடா நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள உரிமம் வழங்கப்படும். இதன்படி நடப்பு மே மாத இறுதியில் இக்கருவி, கையாளும் தொழில்நுட்பம் ஆகியவை பரவலாக அதிக அளவில் செயல்பாட்டுக்கு வர வழி வகுக்கப்படும்.

கோவிட் 19 தொற்றை ஒழிப்பதற்கான இந்த ஃபெலூடா கருவித் தொழில்நுட்பமும் முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பாகும். பெருமளவில் பயன்படுத்தக் கூடியது. இது எளிதில் கையாளக் கூடியது. விலை மலிவானது, இதர இயந்திரங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாதது. இக்கருவி பரவலாகப் பயன்படுத்தும் வகையிலும் விரைவாகவும் கொண்டு வருவதற்கு மற்றும் டாடா சன்ஸ் நிறுவன நிறுவனமும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

 

===


(रिलीज़ आईडी: 1621375) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Telugu