அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நேனோ அறிவியல் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிப்பு: மும்பை இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியருக்கு விருது

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAY 2020 7:19PM by PIB Chennai

மும்பை இந்திய தொழில்நுட்ப கழக கல்வி நிறுவனத்தில் மின் பொறியியல் துறைப் பேராசிரியர் சவுரப் லோதாவுக்கு நேனோ அறிவியல் – தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்காக 2020ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது. சிலிகான் மற்றும் நேனோ எலெக்ட்ரானிக்ஸ் பாகங்களைக் கொண்டு டிரான்சிஸ்டர் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. வான்டர் வால்ஸ்  எனப்படும் பொருட்களைக் கொண்டு இரு பரிமாண அடிப்படையில் இந்தக் கருவிகள் உருவாக்கப்படுகின்றன.

(மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் லோதாவுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்: saurabh.lodha[at]gmail[dot]com)

****
 


(வெளியீட்டு அடையாள எண்: 1621373) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , English , Urdu , हिन्दी , Bengali