பாதுகாப்பு அமைச்சகம்

ஹண்ட்வாரா தியாகி கர்னல் அசுட்டோஷ் ஷர்மாவுக்கு அஞ்சலி

Posted On: 05 MAY 2020 8:35PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாராவில் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த கர்னல் அசுட்டோஷ் ஷர்மாவின் உடல் ஸ்ரீநகரில் இருந்து ஜெய்ப்பூருக்கு கொண்டு வரப்பட்டது. மே 05 ஆம் தேதியன்று அவருக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் திரு அசோக் கெலோட், சப்டா சாகி ராணுவ கமாண்டர் லெப். ஜெனரல் அலோக் கிளேர், ஆகியோர் அவருடைய உடலுக்கு மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், ராஜஸ்தான்  மாநில முன்னாள் ராணுவத்தினர் நலத் துறை அமைச்சர் திரு கச்சரியவாஸ், வருவாய்த் துறைச் செயலாளர் திரு சந்தீப் வர்மா, ஜெய்ப்பூர் காவல் துறை ஆணையாளர் திரு ஆனந்த் ஸ்ரீவத்சவா, ஜெய்ப்பூர்  துணை ஆணையர் திரு ஜோகராம் ஆகியோரும் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஜெனரல் கிளேர், கர்னல் அசுட்டோஷ் ஷர்மா மற்றும், மேஜர் அனுஜ் சூட் உள்ளிட்ட அவருடைய நான்கு வீரர்களும் தைரியமாகக் களமிறங்கி, நாட்டின் சேவையில் உயிர்த் தியாகம் செய்தமைக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.

கர்னல் அசுட்டோஷ் ஷர்மா கார்ட்ஸ் படையின் 19வது பட்டாலியனில் 2001ம் ஆண்டு  செப்டம்பர் 01 ம் தேதி  பணியில் சேர்ந்தார்.


(Release ID: 1621361) Visitor Counter : 124