உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உதான் திட்டத்தின்கீழ் 443 விமானங்களை இயக்கிய ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை, தனியார் நிறுவனங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 04 MAY 2020 7:21PM by PIB Chennai

லைஃப்லைன் உதான் திட்டத்தின்கீழ், ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், 443 விமானங்களை இயக்கியுள்ளன. இவற்றில் 265 விமானங்களை ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்கள் இயக்கின. இதுநாள் வரை 4,34,531 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணம் மேற்கொண்டு 821.07 டன் சரக்குகள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான லைஃப்லைன் உதான்விமானங்களை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இயக்கி வருகிறது.

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கோவிட்-19 நிவாரணப் பொருட்களை எடுத்து வருவதற்காக கிழக்கு ஆசியாவுடன் வான்வழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம், 930 டன்கள் அளவுக்கான மருத்துவ உபகரணங்களை ஏர் இந்தியா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1621154) வருகையாளர் எண்ணிக்கை : 240
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Odia , Telugu , Kannada