ஜல்சக்தி அமைச்சகம்

'ஆறுகள் மேலாண்மையின் எதிர்காலம்' குறித்த 'ஐடியாத்தானை' தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் நடத்தியது

Posted On: 02 MAY 2020 6:25PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று நெருக்கடி ஆறுகள் மேலாண்மைக்கான  வருங்கால திட்டங்களை எவ்வாறு வடிவமைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள 'ஆறுகள் மேலாண்மையின் எதிர்காலம்' குறித்த 'ஐடியாத்தான்' என்னும் ஆலோசனைகளை சொல்லும் போட்டியை, நீர் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கமும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனமும்  இணைந்து நடத்தியது.

பயமும் வருத்தமும் கோவிட்-19 தொற்று பற்றிய பொது விளக்கமாக இருந்தாலும், சில நேர்மறை வளர்ச்சிகளையும் இந்த நெருக்கடி ஏற்படுத்தி இருக்கிறது. இயற்கை சூழ்நிலையின் கண்கூடான மேம்பாடு இவற்றில் ஒன்றாகும். ஆறுகள் சுத்தமாகி இருக்கின்றன. காற்றும் புத்துணர்ச்சி அடைந்துள்ளது. பைங்குடில் வாயுக்களின் உமிழ்வு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. விலங்குகளும் பறவைகளும் தங்களது வாழ்விடங்களுக்குத் திரும்பி மகிழ்ச்சியோடு இருக்கின்றன. ஆறுகள் மேலாண்மைப் பற்றிய பார்வையில் மட்டுமே பார்க்கும் போது, இந்தியாவில் கங்கை மற்றும் யமுனையின் தண்ணீர் தரத்தில் கடந்த சில வாரங்களில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கங்கை நதியில் கேங்ஜெடிக் டால்பின் என்னும் உயிரினம், சுமார் கடந்த ஒரு வருடத்தில் ஆற்றின் பல பகுதிகளில் தென்பட்டு, முன்னேற்றத்தைக் காட்டி வந்தது. பொது முடக்கத்தின் போது கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளில் இது பலமுறை  தென்பட்டது. சுற்றுலா பயணிகள் வராமல் இருந்ததால் வெனிஸில் உள்ள பிரபல அழுக்கு கால்வாய்கள் தூய்மை அடைந்துள்ளன. போக்குவரத்து குறைந்துள்ளதால், சமீபகால வரலாற்றில் முதல் முறையாக இத்தாலியின் நீர்வழிகளுக்கு டால்பின்கள்  மீண்டும் வந்துள்ளன.

நீண்ட காலத்தில் எந்த அளவுக்கு மாற்றம் நிகழும் என்பதே ஒரே கேள்வி ஆகும். இதர சிக்கல்களை சரி செய்ய ஆறுகளின் சமூக கோணத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை ஐடியாத்தான் பரிசோதித்தது. ஆறுகள் மேலாண்மை குறித்த எத்தகைய பாடங்களை பெரும் தொற்று நமக்கு சொல்லித் தந்தது? ஆற்றில் நெருக்கடி ஏற்பட்டால் எந்த மாதிரியான எதிர்வினை நடவடிக்கைகள் தேவை?

நேற்று நடைபெற்ற சர்வதேச இணைய கருத்தரங்கில் கிட்டத்தட்ட 500 பேர் பங்கேற்றனர். பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளை சேர்ந்தவர்கள் நிபுணர் குழுவில் இருந்தனர்.

ஆறுகள் மேலாண்மையைப் பற்றிய கூடுதல் கவனத்தை ஈர்க்கவும், நகரங்களையும் ஆறுகளையும் ஒன்றோடொன்று இணைப்பதைப் பற்றி வலியுறுத்தவும் இந்த ஐடியத்தானை தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் நடத்தியது.

***



(Release ID: 1620601) Visitor Counter : 149