கலாசாரத்துறை அமைச்சகம்

முன்னோடிக் கலைஞரான ஜமினி ராய்க்கு மெய்நிகர் சுற்றுலா மூலம் தேசிய நவீன ஓவிய கலைக்கூடம் அஞ்சலி செலுத்துகிறது

Posted On: 02 MAY 2020 3:31PM by PIB Chennai

முன்னோடிக் கலைஞரான ஜமினி ராய்க்கு, அவரது 133ஆம் பிறந்த வருடத்தில்மெய்நிகர் சுற்றுலா மூலம் தேசிய நவீன ஓவிய கலைக்கூடம் அஞ்சலி செலுத்துகிறதுஒன்பது பிரிவுகளில் (பறவை, விலங்கு, எழுத்தோவியம் , கோட்டோவியம், புராணக் கதை, நாட்டுப்புற மரபு, கிருஷ்ண லீலை, இயேசுவின் வாழ்க்கை, தாய் - குழந்தை, ஓவியம், இயற்கை, சாந்தல்கள், கிராமப்புற வாழ்க்கை, பெண்கள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஜமினி ராய் மெய்நிகர் சுற்றுலா (http://www.ngmaindia.gov.in/virtual-tour-of-modern-art-1.asp),  தேசிய நவீன ஓவியக் கலைக்கூடத்தின் நிரந்தர சேகரிப்பில் உள்ள 215 ஓவியங்களில் 203 ஓவியங்களைப் பார்வையாளர்களுக்குக் காட்டி, அவரது படைப்பில் உள்ள வெவ்வேறு எண்ணங்களை வண்ணங்களாகப் பிரதிபலிக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் இந்த முன்னோடிக் கலைஞரின் மொத்த ஓவியங்களின் மெய்நிகர் சுற்றுலா, ஓவிய ரசிகர்களுக்கு கட்டாயம் உவப்பளிக்கும் ஒன்றாகும்.

***


(Release ID: 1620447) Visitor Counter : 178