அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கோவிட்-19 தொற்றை எதிர்ப்பதற்காக மூன்று அடுக்கு மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் N-95 சுவாசக் கருவிகளை தயாரிக்க வைரஸ் தடுப்பு நானோ – பூச்சுகள் பூசும் செயல்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
23 APR 2020 6:44PM by PIB Chennai
நானோ மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் அஸ்வினி குமார் அகர்வால் உருவாக்கிய வைரஸ் தடுப்பு நானோ பூச்சுகள் பூசும் செயல்முறையை அதிகரிப்பதற்கான ஆதரவை அளித்தார். இது கோவிட்-19 ஐ எதிர்க்கும் மூன்று அடுக்கு மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் எண் 95 சுவாசக் கருவியை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு பொருத்தமான பொருளாகப் செயல்படும்.
பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை மற்றும் பலவற்றை எதிர்த்துப் போராடும் வலுவான நுண்ணுயிர் கொல்லி செயல்பாடுகள் வெள்ளியில் இருப்பதாக அறியப்படுகிறது. தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள் போன்றவற்றில் மிகவும் பயனுள்ள இந்த நுண்ணுயிர் கொல்லி நானோ துகள்களைப் பயன்படுத்துவது ஒரு பயனுள்ள பயன்பாடாகும், இது மருத்துவத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்” என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு: டாக்ட்ர் அஸ்வினி குமார் அகர்வால் (ashwini@smita-iitd.com, +919810585313)] தொடர்பு கொள்ளவும்.
***********
(வெளியீட்டு அடையாள எண்: 1617803)
வருகையாளர் எண்ணிக்கை : 185