சுற்றுலா அமைச்சகம்

‘ போட்டோவாக்கிங் வாரணாசி- பார்வை விருந்து’ என்னும் ஏழாவது இணையவழி தொடருக்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு

प्रविष्टि तिथि: 23 APR 2020 4:40PM by PIB Chennai

உலகம் முன்னெப்போதும் கண்டிராத நெருக்கடி நிலையைக் கடந்து வரும் சூழலில், தனிநபர்களின் உள்ளத்தை மீட்டுருவாக்குவதும், சுற்றுலாத் தொழிலைப் பராமரிப்பதும் மிகவும் அவசியமாகும். இந்தியாவின் பன்முக சுற்றுலா மற்றும் பண்பாட்டு இயற்கை வனப்பைக் கொண்டாடும் முன்முயற்சியாக, இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் ‘’ நம் நாட்டைப் பாருங்கள்’’ என்ற கருப்பொருளின் கீழ், இணைய வழி தொடர்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்தத் தளம், ஏராளமான சுற்றுலா ஆர்வலர்களை இணைத்து, வல்லுனர்கள் தங்கள் பிராந்தியம், நகரம், பாரம்பரியம், பண்பாடு, தொன்மை, வரலாறு ஆகியவை பற்றிக் கூறுவதைக் கேட்க வைக்கிறது. இந்தத் தொடரில், சுற்றுலா அமைச்சகம், ‘ போட்டோவாக்கிங் வாரணாசி; ஒரு பார்வை விருந்து’ என்ற ஏழாவது வலைதள அரங்கை ஏப்ரல் 23-ம் தேதி  அரங்கேற்றியது.

தொடர்ந்து குடியேறி வரும், உலகின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசி, ஒவ்வொரு மூலையிலும் மறைந்திருக்கும் பண்பாட்டு நிகழ்வுகள், நாவில் நீர் ஊறும் சுவை மிகுந்த உணவுப் பண்டங்கள், உயிரோட்டமான பாரம்பரியங்களுடன், இந்தியாவின் மிகச் சிறந்த நதிதீரத்தையும் கொண்டு திகழ்கிறது. பல மைல் நீள மலைத் தொடர்கள், எண்ணற்ற கோவில்கள், லட்சக்கணக்கான கடவுள்கள், தேவிகளுடன், இந்த நகரம் ஒவ்வொருவரின் பிரார்த்தனைக்கும் விடை தருகிறது. இணையவழி அரங்கு வாரணாசியின் தொன்மைமிகு வரலாறு, பண்பாட்டு பாரம்பரியம், ஆன்மீகத் தொடர்பு, சுவையான உணவு வகைகள் ஆகியவற்றை ஒவ்வொரு இடத்திலும் பறைசாற்றுகிறது.

 


(रिलीज़ आईडी: 1617591) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati