வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு விண்ணப்பிக்கும் காலவரம்பு மாற்றியமைப்பு
प्रविष्टि तिथि:
21 APR 2020 6:59PM by PIB Chennai
2017 டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தக நோட்டீஸ் எண். 02/ 2017ன் படி, 1975-ன் சுங்கக் கட்டணம் மற்றும் ஆன்டி –டம்பிங்க் ( இயல்பான விலையை விடக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யும் போது விதிக்கப்படுவது) விதிமுறையின் கீழ், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், வர்த்தக தீர்வுகளுக்கான தலைமை இயக்ககம், இதற்கான கால வரம்பையும், நடைமுறையையும் வகுத்துள்ளது. அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள இ, ஆன்டி – டம்பிங் நடவடிக்கை மற்றும் எஸ்எஸ்ஆர் விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கு கால வரம்பு முடிவதற்கு குறைந்த பட்சம் 270 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள கால வரம்பை நியாயமான தாமதக் காரணம் இருந்தால் 240 நாட்கள் வரை தளர்த்தப்படலாம்.
எஸ்எஸ்ஆர் விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, நடவடிக்கை காலாவதி ஆவதற்கு 270 நாட்களுக்கு முன்பாகவோ அல்லது 240 நாட்ளுக்கு முன்பாகவோ, தாமதத்துக்கான நியாயமான காரணம் இருப்பின், அதனை ஏற்றுக்கொள்வதில் நியாயம் உள்ளது எனக் கருதப்படுகிறது. இதன் மூலம், செயல்பாடு முடிவதற்கு முன்பாக, எஸ்எஸ்ஆர் விண்ணப்பம் தாக்கல் செய்ய முடியும். இருப்பினும், உள்நாட்டு தொழில் துறையினரிடமிருந்து இது தொடர்பாக அடிக்கடி வேண்டுகோள்கள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. சில தவிர்க்க முடியாத சூழலில், குறைந்தபட்சம் 240 நாட்கள் என்ற காலவரம்பைப் பின்பற்ற இயலவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
தொழில் துறையினரின் இந்தக் குறைபாட்டுக்கு தீர்வு காணும் வகையில், ஏப்ரல் 20-ம் தேதி ,வர்த்தக நோட்டீஸ் (எண். 02/2020) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், காலவரம்பை 180 நாள் வரை தளர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. 270 நாள் என்ற கால அவகாசத்தைக் கடைப்பிடிப்பதில் உள்நாட்டு தொழில் துறையினர் எதிர் கொள்ளும் உண்மையான சிரமத்தைக் கருத்தில் கொண்டு, எஸ்எஸ்ஆர் விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கு இந்தத் தளர்வு செய்யப்பட்டுள்ளது. சில விதிவிலக்கான நிகழ்வுகளில், இந்தக் காலவரம்பை அங்கிகரிக்கப்பட்ட அதிகாரி மேலும் 120 நாட்கள் வரை தளர்த்தலாம்.
(रिलीज़ आईडी: 1617078)
आगंतुक पटल : 313