கலாசாரத்துறை அமைச்சகம்
கொரோனா வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக செங்கோட்டை, குதுப் மினார் மற்றும் ஹுமாயுனின் கல்லறை ஆகிய பகுதிகள் சிறப்பான முறையில் ஒளியூட்டப்பட்டன.
Posted On:
18 APR 2020 9:30PM by PIB Chennai
உலகப் பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள செங்கோட்டை, குதுப்மினார் மற்றும் ஹுமாயுனின் கல்லறை ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சிறப்பான முறையில் ஒளியூட்டி, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தில்லி வட்டம் கொரோனா வீரர்களுக்கு நன்றி செலுத்தியது. அதோடு, வரலாற்றுச் சின்னங்களையும் அவற்றின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க, காணொளிக் காட்சி மூலம் மாணவர்களை உறுதி மொழியையும் எடுக்க செய்தது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தில்லி வட்டம்.
சிஎஸ்எச்பி பொதுப் பள்ளி, பிரதாப் விஹார், காசியாபாத் மற்றும் ASPAM ஸ்காட்டிஷ் பள்ளி, நோய்டா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள், தங்களின் ஆசிரியர்களோடு சேர்ந்து காணொளிக் காட்சி மூலம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மொத்தம் 60 ஆசிரியர்களுன், 247 மாணவர்களும் உறுதிமொழி எடுத்தனர். சிஎஸ்எச்பி பொதுப் பள்ளி, பிரதாப் விஹார், காசியாபாத்தின் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும், ASPAM ஸ்காட்டிஷ் பள்ளி, நோய்டாவை சேர்ந்த 1ஏ மற்றும் 1பி வகுப்புகளின் மாணவர்களும் ஆன்லைன் உறுதிமொழியை எடுத்தனர்.
மனித குலத்துக்கு தங்கள் சுயநலமற்ற சேவைகளை வழங்கும் கொரோனா வீரர்களுக்கு நன்றியை செலுத்தும் விதத்தில், அனைத்து மூன்று வரலாற்றுச் சின்னங்களையும் மாலையில் சிறப்பான முறையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தில்லி வட்டம் விளக்குகளால் அலங்கரித்தது. செங்கோட்டையில், மெழுகுவர்த்திகள் (தீபங்கள்) இந்திய வரைபடத்தின் வடிவில் அமைக்கப்பட்டு, 'ஹம் ஜிதேங்கே' (நாம் வெற்றி பெறுவோம்) என்னும் வாசகத்தோடு ஒளிர்ந்தன.
குதுப் மினாரில், மெழுகுவர்த்திகள் (தீபங்கள்) வீட்டின் வடிவில் அமைக்கப்பட்டு, 'Stay Home, Stay Safe' (வீட்டில் இரு, விழிப்புடன் இரு) என்னும் வாசகத்தோடு ஒளிர்ந்தன.
ஹுமாயுனின் கல்லறையில், பொதுவான ஒளி அலங்காரத்தோடு 41 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. இது கொரோனாவுக்கு எதிரான நமது போரில் 41 நாட்கள் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதை அடையாளப்படுத்தியது.
*******
(Release ID: 1616082)
Visitor Counter : 176