கலாசாரத்துறை அமைச்சகம்
இந்தியாவின் வெளிப்படாத கலாச்சார பாரம்பரியத்தின் தேசியப் பட்டியலை இன்று வெளியிட்டார் கலாச்சார அமைச்சர் பிரகலாத் சிங் படேல்
Posted On:
18 APR 2020 2:59PM by PIB Chennai
இந்தியாவின் வெளிப்படாத கலாச்சார பாரம்பரியத்தின் தேசியப் பட்டியலை மத்திய கலாச்சார அமைச்சர் (தனி பொறுப்பு) திரு பிரகலாத் சிங் படேல் புது தில்லியில் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வெளிப்படாத கலாச்சார பாரம்பரிய மரபுகளின் பிரத்தியேக களஞ்சியத்தை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளதாகவும், அதில் 13ஐ மனித குலத்தின் வெளிப்படாத கலாச்சார பாரம்பரியமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு அங்கீகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார். வெளி உலகத்திற்குப் பாரம்பரியத்தில் பதிக்கப்பட்டுள்ள இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதற்கான ஒரு முயற்சியே வெளிப்படாத கலாச்சார பாரம்பரியத்தின் தேசியப் பட்டியல் ஆகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பலதரப்பட்ட வெளிப்படாத கலாச்சார பாரம்பரியத்தின் கூறுகளை பற்றிய விழிப்புணர்வை தேசிய மற்றும் சர்வதேச அளவில் உருவாக்குவதும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். இந்த முயற்சி கலாச்சார அமைச்சகத்தின் தொலைநோக்கு 2024ன் ஒரு அங்கமும் ஆகும்.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் 2003 வெளிப்படாத கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு மாநாட்டை தொடர்ந்து, ஐந்து விரிவான பிரிவுகளில் இந்த பட்டியல் வகைப்படுத்தப்பட்டு, வெளிப்படாத கலாச்சார பாரம்பரியம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
* வாய்மொழி மரபுகள் மற்றும் வெளிப்பாடுகள், மொழியை வெளிப்படாத கலாச்சார பாரம்பரியத்தின் வாகனமாக சேர்ப்பது உட்பட;
* நிகழ்த்து கலைகள்
* சமூக பழக்கங்கள், சடங்குகள் மற்றும் திருவிழாக்கள்;
* அறிவு மற்றும், இயற்கை மற்றும் பிரபஞ்சம் சார்ந்த பழக்கங்கள்;
* பாரம்பரிய கைவினைத்திறன் போன்றவை இந்த பட்டியலில் உள்ளன.
***
(Release ID: 1615765)
Visitor Counter : 275