அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நீரிலிருந்து நச்சு அகற்றும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிக்கு அறிவியல் தொழில்நுட்ப துறை உதவி

Posted On: 16 APR 2020 6:41PM by PIB Chennai

தண்ணீரில் உள்ள நச்சுத் தன்மையை சூரிய ஒளியின் துணையோடு நீக்கும் நவீன தொழில்நுட்பத்தைக் கண்டறியும் ஆய்வில் அசாமைச் சேர்ந்த விஸ்வாஸ் சவுத்ரி என்ற விஞ்ஞானி ஈடுபட்டுள்ளார். அசாமில் உள்ள மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில் துணைப் பேராசிரியராக விஸ்வாஸ் சவுத்ரி பணியாற்றி வருகிறார்.

“ப்ளாஸ்மோனிக் செமிகண்டக்டர் நேனோ மெட்டீரியல்  எனப்படும் குறைவாகக் கடத்தும் அயனிமத் தன்மையுள்ள மீநுண் பொருட்களைப் பயன்படுத்தி அவர் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார். உலோகம் போல அமைந்துள்ள அந்தப் பொருட்கள் எலெக்ட்ரான்கள் (எதிர் மின்னி) படிந்து இருக்கும். சூரிய ஒளிச்சேர்க்கையின்போது அவை இயங்கும். அதன் மூலம் நீரில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும்.

நீரில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் புதுப்பிக்கும் ஹைட்ரானை உற்பத்தி செய்யவும் நேனோ பொருட்களின் ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரிக்கவும் சூரிய ஒளியை அவர் பயன்படுத்துகிறார்.

இளைஞர்களின் ஆய்வுத் திறனை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட மத்திய அரசின் அறிவியல் தொழில்நுடப் துறையின் “இன்ஸ்பயர்” என்ற திட்டத்தின் கீழ் விஸ்வாஸ் சவுத்ரி விருதும் அங்கீகாரமும் பெற்றுள்ளார். இவர் நீரிலிருந்து நச்சு அகற்றும் ஆய்வில் “ப்ளாஸ்மோனிக் மெட்டீரியல்  பயன்படுத்தி “ஃபோட்டோன்” (Photon) எனப்படும் ஒளியணுவின் திரட்சி மற்றும் பெருக்கம் குறித்த பயன்பாடு குறித்தும் கண்டறிந்து வருகிறார்.

அவர் உருவாக்கி வரும் பொருட்கள் நீரில் அதிகம் காணப்படும் “ஆர்சனிக்” மற்றும் “ஃப்ளோரைடு” போன்ற நச்சு அயனிகளை அகற்றும். வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் உள்ள நீரில் இத்தகைய நச்சு அயனிகள் இருக்கின்றன. வெயில் படும்போது, அந்நீரில் உள்ள நச்சு அயனிகளை நீக்கலாம்.

அரசு அளித்துவரும் உதவி  மூலம் அவர் “ஃபோட்டோகேடலிடிக்” எனப்படும் ஒளிச்சேர்க்கை ஊக்கித் திறனை ஆய்வகத்தில் உருவாக்கலாம். தனது ஆய்வுப் பணிகளுக்காக விஸ்வாஸ் சவுத்ரி பல்வேறு இடங்களிலிருந்து நச்சுத்தன்மையுள்ள நீரைத் திரட்டி, அதிலிருந்து நச்சினை நீக்கி, தெளிந்த குடிநீராக்கும் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

****



(Release ID: 1615347) Visitor Counter : 108