அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொரொனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவல் குறித்த இடம் சார்ந்த திட்டங்கள் மற்றும் முடிவுகளுக்கு உதவும், இடம் சார்ந்த ஒருங்கிணைந்த தகவல்களை வழங்கும் மென்பொருள்.

Posted On: 15 APR 2020 7:23PM by PIB Chennai

தற்போதைய கொரானா வைரஸ் (COVID-19) தொற்றுப் பரவல் நமது நாட்டில் உருவாக்கியுள்ள சமூக – பொருளாதாரத் தாக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை (DST) ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது. அந்த மென்பொருள் புவி சார்ந்த தகவல்கள், தரநிலை சார்ந்த சேவைகள் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகள் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டது

இந்திய அளவைத் துறை (சர்வே ஆஃப் இந்தியா) (SoI) தயாரித்து நிர்வகிக்கும் இந்த கைபேசி மென்பொருளான SAHYOG, மற்றும் அதனுடைய வலைதளமான (https://indiamaps.gov.in/soiapp/) ஆகியவை, கொரொனா வைரஸ் (COVID-19) பரவல், சமூகத் தொடர்புகளின் மூலம் கிடைக்கப் பெற்ற புவிசார் தரவுத் தொகுப்புகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொற்று நோய்த் தடுப்புக்கு இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான செயல்பாடாகும்.

தொடர்பு கண்காணிப்பு, பொது விழிப்புணர்வு மற்றும் சுய மதிப்பீட்டு நோக்கங்களுக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்திய “ஆரோக்கியசேது” கைபேசி செயலியின் பயன்பாட்டை நிறைவு செய்யும் வண்ணம் சஹ்யோக் என்ற இந்தக் கைபேசி மென்பொருள் உள்ளது.

 (For more details, please contact Shri Pankaj Mishra, Deputy Surveyor General (Technical), Surveyor General Office, Survey of India Dehradun-248001. 0135-2746805. pankaj.mishra.soi[at]gov[dot]in.Department of Science & Technology)

****



(Release ID: 1614966) Visitor Counter : 235