புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
கிராமப்புறம் நகர்ப்புறம், இரண்டும் இணைந்த மார்ச் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் வெளியீடு
Posted On:
13 APR 2020 5:30PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின், தேசிய புள்ளியியல் அலுவலகம், 2012=100 என்ற அடிப்படையில் 2020 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கு (உத்தேசம்) பிப்ரவரி மாதத்திற்கு (இறுதி) நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது.
இது தவிர இதற்கு ஈடான நுகர்வோர் உணவு குறியீட்டு எண் (அனைத்திந்திய கிராமப்புற, நகர்ப்புற மற்றும் இணைந்த) நுகர்வோர் குறியீட்டு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
1114 நகர்ப்புற சந்தைகளில் இருந்தும்,1181 கிராமப்புற சந்தைகளில் இருந்தும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின், களப்பணி பிரிவினால் விலை குறித்த புள்ளி விவரங்கள் ஒரே சீரான வாராந்திர பதிவேட்டில் சேகரிக்கப்படுகின்றன.
கோவிட்19 தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசு அறிவித்துள்ள தேசிய பொது முடக்கத்தையும், தேசிய புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு. நுகர்வோர் விலை குறியீட்டு எண்களுக்கான விலை விவரங்களை சேகரிப்பதற்கான களப்பணிகள் மார்ச் 19ம் தேதி அன்று முதல் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 60 சதவீத விலை கொட்டேஷன் பெறப்பட்டன.
விவரங்கள் அறிய
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/CPI_Press%20Release_March%202020.pdf
******
(Release ID: 1614348)
Visitor Counter : 224