குடியரசுத் தலைவர் செயலகம்

டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2020 3:30PM by PIB Chennai

டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:


"இந்திய அரசியல் சட்டச் சிற்பியான டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்த  தினத்தை முன்னிட்டு குடிமக்கள் அனைவருக்கும் னது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், நீதியியல் நிபுணர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி, சட்ட நிபுணர் என்ற வகையில் டாக்டர் அம்பேத்கர் நாடு, மற்றும் சமுதாயத்தின் நலனுக்காக  தொடர்ந்து பாடுபட்டார்.

சமூக நல்லிணக்கமும் சமத்துவமும் நிலவும் சமுதாயத்தை உருவாக்க அவர் விரும்பினார். இந்த நோக்கத்திற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். கடந்த பல பத்தாண்டுகளாக நமது நாட்டு மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தி வலுப்படுத்தும் வகையில் முற்போக்கான, அனைத்தையும் உள்ளடக்கிய அரசியல் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் இந்தியாவுக்குப் பரிசளித்தார்.

அம்பேத்கரின் ஜெயந்தி தினத்தன்று, அவரது மாபெரும் புகழ், போராட்டம், மற்றும் நன்னெறிகளில் இருந்து ஊக்கம் பெற்று அவரது போதனைகளையும், கொள்கைகளையும் உள் வாங்கிக் கொள்ளவும் வலுவான, வளமான இந்தியாவை உருவாக்கவும் உறுதி ஏற்போம் . அதே சமயம், கோவிட்-19 தொற்றினைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் தனிநபர் இடைவெளி என்ற நடைமுறையைப் பின்பற்றி வீடுகளிலேயே
தங்கியிருந்து அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாட வேண்டும் "


(வெளியீட்டு அடையாள எண்: 1614003) வருகையாளர் எண்ணிக்கை : 141
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu