குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2020 3:45PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், பகவான் மகாவீரர், இப்புவியில் மக்களின் மனம் கவர்ந்த ஆன்மீகத் தலைவராக விளங்கினார் என்று குறிப்பிட்ட அவர், கொவிட்-19ஆல் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில், மகாவீரரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகத்தைப் பெறுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1611348)
வருகையாளர் எண்ணிக்கை : 143