நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

கொவிட்-19 தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருக்கும் காலத்தில் நாடு முழுவதும் தங்கு தடையின்றி உணவு தானிய விநியோகத்தை வழங்கும் இந்திய உணவுக் கழகம்

இடுகை இடப்பட்ட நாள்: 03 APR 2020 6:23PM by PIB Chennai

இந்திய உணவுக் கழகம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் அரிசி, கோதுமை நாடு முழுவதும் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்துள்ளது.

இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் கோதுமை மற்றும் அரிசியை ரயில் போக்குவரத்து மூலம் அனுப்பப்படுவதால் அதிகரித்து வரும் உணவு தானியங்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மொத்தம் 69 ரேக்குகள் இன்று ஏற்றப்படுகின்றன. இன்றைய நிலவரப்படி 03.04.2020 சுமார் 1.93 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளது. இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமலான நாளிலிருந்து அதாவது 24.03.2020 அன்றிலிருந்து 477 ரேக்குகளை, மாநிலங்களுக்கு தோராயமாக 13.36 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் அரிசியை அனுப்பியுள்ளது.

•••••••••••••••


(வெளியீட்டு அடையாள எண்: 1611077) வருகையாளர் எண்ணிக்கை : 144
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada