பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் மற்றும் பிரதமர் உஜ்வால யோஜனா பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர்களை வழங்குவது குறித்து திரு தர்மேந்திர பிரதான் ஆலோசனை

प्रविष्टि तिथि: 03 APR 2020 6:30PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றால் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மாவட்டங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதை மதிப்பிடுவதற்காக, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான மாவட்ட அதிகாரிகளுடன் உரையாடினார்.

இணைய மாநாட்டின் மூலம் தொடர்பு கொண்ட திரு பிரதான், பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை தடையின்றி செயல்படுத்துவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும், தற்போது 15 துறைமுகங்கள், 195 சமையல் எரிவாயு ஆலைகள் மற்றும் அதற்கான போக்குவரத்தும் தினமும் செயல்பட்டு வருவதாகவும், இதனால் நாட்டில் சமையல் எரிவாயு பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி / டார்ச் / கைபேசியில் ஒளி எழுப்ப வைப்பதன் மூலம் தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தி, பிரதமரின் வேண்டுகோளுக்கு அதிகபட்ச ஆதரவை தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளையும் அறிவுறுத்தினார்.

பிரதமர் உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு அரசாங்கம் அறிவித்த நிவாரணப் தொகை குறித்தும் மாவட்ட அதிகாரிகள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

•••••••••••••••


(रिलीज़ आईडी: 1611075) आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese , Telugu , Kannada