உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உடான் விமானங்கள் ஒரு லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்துள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 03 APR 2020 8:45PM by PIB Chennai

உடான் உயிர்நாடித் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை, பவன் ஹன்ஸ் மற்றும் தனியார் நிறுவனங்கள் 97 விமானங்களை இயக்கி வருகின்றன. இதில், ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் நிறுவனங்கள் 71 விமானங்களை இயக்கியுள்ளன. இதுவரை சுமார் 119 டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. இதுவரை இந்த உடான் விமானங்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளன.

சர்வதேச அளவில்,  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை சீன அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முக்கியமான மருத்துவ சரக்கு விநியோகத்துக்கான பணியில் ஈடுபட்டுள்ளன.


(வெளியீட்டு அடையாள எண்: 1611000) வருகையாளர் எண்ணிக்கை : 155
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Assamese , Manipuri , Telugu , Kannada