சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோன வைரஸ் பரவலை தடுப்பதற்கான முகமூடிகள் - வீட்டிலேயே முகமூடிகள் தயாரிக்க ஒரு விளக்க கையேடு
Posted On:
04 APR 2020 12:53PM by PIB Chennai
முகம் மற்றும் வாய்ப்பகுதிகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துவதற்கான அறிவுரைகள்
- கோவிட்-19 தொற்றைத் தடுக்க சமூக இடைவெளியும், தனிநபர் சுகாதாரமும் முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். வீடுகளிலேயே தயாரிக்கப்படும் கவசங்களை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்று சில நாடுகள் தெரிவித்துள்ளன. வீடுகளில் தயாரிக்கப்படும் முகக்கவசங்களை பயன்படுத்துவது, தனிநபர் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதில் சிறந்த முறையாக உள்ளது. இதுபோன்று பயன்படுத்துவது, ஒட்டுமொத்தமாக உடல் நலனை பாதுகாப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
- எனவே, உடல்நல பாதிப்புகள் அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் இல்லாதவர்கள், வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தும் வகையில் வீடுகளிலேயே தயாரிக்கப்படும் முகக்கவசங்களை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இது பொதுமக்களை பாதுகாப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
- ஆனால், இந்த முகக்கவசத்தை சுகாதாரப்பணியாளர்கள் அல்லது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் அல்லது நோயாளிகள், பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. இதுபோன்ற நபர்கள், குறிப்பிட்ட பாதுகாப்புக் கவசங்களை அணிய வேண்டியது அவசியமாகிறது.
- இரண்டு முகக்கவசங்களை தயாரித்து வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்படுகிறது. இதன்மூலம், ஒன்றை தூய்மைப்படுத்திக் கொள்ளவும், மற்றொன்றை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். எனினும், கைகளை கழுவுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. முகக்கவசத்தை அணிவதற்கு முன்னதாக கைகளை கழுவ வேண்டும். பயன்படுத்தப்படும் முகக்கவசத்தை தூக்கிவீச வேண்டிய அவசியமில்லை. அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சோப்பு மற்றும் சூடான நீரில் முறையாக துவைக்க வேண்டும். மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்னதாக, முறையாக உலர வைக்க வேண்டும்.
- வீடுகளில் இருக்கும் சுத்தமான ஆடைகளைக் கொண்டு முகக்கவசங்களை தயாரிக்க வேண்டும். முகக்கவசமாக தைப்பதற்கு அல்லது தயாரிப்பதற்கு முன்னதாக முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். வாய், மூக்கு ஆகியவற்றை முழுமையாக மூடும் வகையிலும், முகத்தில் எளிதாக கட்டும் வகையிலும் முகக்கவசத்தை தயாரிக்க வேண்டும்.
- முகக்கவசங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. முகக்கவசத்தை ஒரே ஒரு நபர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனி முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும்.
கொரோன வைரஸ் பரவலை தடுப்பதற்கான முகமூடிகள் - வீட்டிலேயே முகமூடிகள் தயாரிக்க ஒரு விளக்க கையேடு
**********
(Release ID: 1610992)
Visitor Counter : 256
Read this release in:
English
,
Kannada
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam