வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

பொது முடக்கத்தை சிறப்பாக அமல்படுத்துவதற்காக வட கிழக்குப் பிராந்தியத்தின் சர்வதேச எல்லை (தோராயமாக 5500 கி.மீ) மூடப்பட்டுள்ளது: டாக்டர். ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 03 APR 2020 3:42PM by PIB Chennai

கொவிட்-19 பெரும் தொற்று குறித்தும், அதை எதிர்த்துப் போராடவட கிழக்கு மாகாணத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம், வட கிழக்கு சபை (NEC) மற்றும் வட கிழக்கு வளர்ச்சி நிதி நிறுவனம் (NEDFI) ஆகியவற்றின் அலுவலர்களோடு, சமூக இடைவெளியின் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து, வட கிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறைக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), டாக்டர் ஜிதேந்திர சிங், காணொலிக் காட்சி மூலம் விரிவான ஆய்வுக் கூட்டமொன்றை நடத்தினார். வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர், கூடுதல் செயலாளர், வட கிழக்கு சபையின் செயலாளர், வட கிழக்கு வளர்ச்சி நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், மற்றும் வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம் மற்றும் வட கிழக்கு சபையின் உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். அரசின் 'வீட்டிலிருந்தே வேலை' செயல்முறை அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பதை எளிதாக்கும் விதமாக, அமைச்சகத்தின் 100% வேலைகளும் மின்னணு அலுவலக (e-Office) முறையில் செய்யப்படுவதாக அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

வட கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மாநிலங்களில் பொது முடக்கம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வட கிழக்குப் பிராந்தியத்தின் சர்வதேச எல்லை (தோராயமாக 5500 கி.மீ) மூடப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம் மற்றும் அதன் அமைப்புகள் & பொதுத் துறை நிறுவனங்களானவட கிழக்கு சபை, வட கிழக்கு வளர்ச்சி நிதி நிறுவனம், வட கிழக்கு கைவினைப் பொருள்கள் & கைத்தறி வளர்ச்சி நிறுவனம், வட கிழக்குப் பிராந்திய விவசாய சந்தைப்படுத்துதல் நிறுவனம், பிரம்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையம் மற்றும் வட கிழக்குப் பிராந்திய கணினித் திட்டம் ஆகியவற்றின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், தங்கள் ஒரு நாள் ஊதியத்தை பிஎம்‍-கேர்ஸ் நிதிக்கு வழங்கினர்.

பிஎம்- கேர்ஸ் நிதிக்கு தன்னுடைய பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 2 கோடியை வட கிழக்கு வளர்ச்சி நிதி நிறுவனம் வழங்குகிறது.

முன்னரே முடிவெடுத்தபடி, கொவிட்-19 பெரும்பரவலை சிறப்பாக எதிர்கொள்வதற்காக, ரூ. 25 கோடியை இடைவெளி நிதியாக வட கிழக்கு மாநிலங்களுக்கு வழங்க அமைச்சகம்/வட கிழக்கு சபை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

***
 


(रिलीज़ आईडी: 1610730) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada