வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஸ்டார்ட் அப் சூழல் முறையினருடன் காணொலி மூலம் திரு.பியூஷ் கோயல் கலந்துரையாடல்

Posted On: 02 APR 2020 7:34PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மதிப்பிடுவதற்காக, ஸ்டார்ட் அப் சூழல் முறையைச் சேர்ந்த, மேம்பாட்டாளர்கள், ஸ்டார்ட் அப் திட்டத்தில் தொழில் தொடங்கியோர், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருடன், மத்திய ரயில்வே, தொழில் மற்றும், வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை, பெருநிறுவன விவகார அமைச்சகம், செபி, சிபிடிடி, சிபிஐசி, நிதி ஆயோக், சிட்பி ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் நாட்டின் எதிர்கால நம்பிக்கையின் முன்னோடிகள் என்று கூறிய அமைச்சர், அவர்களின் முக்கிய பங்களிப்பு பற்றிக் குறிப்பிட்டார். நாடு முன்னெப்போதும்  இல்லாத அளவுக்கு நெருக்கடியைச் சந்தித்துள்ளது என்றும், இதற்கு சரியான தீர்வுகள் அவசியம் என்றும் அவர் கூறினார். தொழில்துறை குறிப்பாக ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் சந்தித்து வரும் சிரமங்களைச் சமாளிக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்று அவர் தெரிவித்தார்.

 



(Release ID: 1610620) Visitor Counter : 116