அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் 19 தொடர்பான தேவைகளை சமாளிப்பதற்காக தானியங்கி செயற்கை சுவாசக் கருவிகளை (வென்டிலேட்டர்களை) உற்பத்தி செய்ய எஸ் சி டி எம் எஸ் டி – விப்ரோ-3 டி இடையே ஒப்பந்தம்

Posted On: 02 APR 2020 6:23PM by PIB Chennai

இணைந்து செயற்கை சுவாச அலகின் அடிப்படையில் அமைந்துள்ள அவசரகால வென்டிலேட்டர் கருவி ஒன்றின் மூலமுன்மாதிரியைத் தயாரிப்பதற்காக, இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (SCTIMST), பெங்களூருவில் உள்ள விப்ரோ 3 டி நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற உள்ளது.

 

ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் மனிதசக்தியால் இயங்கும் / தானியங்கி செயற்கை சுவாசக் கருவி (Artificial Manual Breathing Unit - AMBU) ஒன்றைத் தயாரித்துள்ளது. இதன் மருத்துவமனைசார் சோதனை மற்றும் தயாரிப்பின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

 

தற்போது நாட்டில் நிலவுகின்ற கோவிட் 19 தொடர்பான நெருக்கடியின் அவசர தேவைகளுக்கு இந்த வென்டிலேட்டர்கள் உதவியாக இருக்கும்.

தேவையான அளவிற்கு சீராக மூச்சு விட முடியாதவர்கள் அல்லது மூச்சு விட முடியாத நோயாளிகளுக்கு ஆக்கப்பூர்வ அழுத்த சுவாசம் (Positive Pressure Ventilation) கொடுக்கக்கூடிய, கைகளால் இயக்கக்கூடிய கருவி Bag Valve Mask (BVM) அல்லது ஏ எம் பி யூ பை (AMBU Bag) எனப்படுகிறது. ஆனால் இதனைக் கையாள்வதற்கு, நோயாளிகளுக்கு அருகே ஒருவர் இருந்தாகவேண்டும். கோவிட் 19 தொற்று நோய் தாக்கத்திற்கு உள்ளான நோயாளிகளுக்கு அருகே ஒருவர் இருப்பது, இருந்து இந்தக் கருவியை உபயோகிப்பது என்பது உசிதமானது அல்ல. அவருக்கும் தொற்று நோய் ஏற்பட அதிக அளவு சாத்தியம் உள்ளது.

அவசரகால சிகிச்சைப் பிரிவின் வென்டிலேட்டர்களைப் பயன்படுத்திகொள்ளும் வாய்ப்பில்லாத, அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு, மருத்துவ ஆலோசகர்கள் ஆலோசனையின்படி  ஸ்ரீ சித்திரத் திருநாளின் தானியங்கி ஏ எம் பி யூ  AMBU கருவிகளைப் பயன்படுத்தலாம்



(Release ID: 1610596) Visitor Counter : 180