தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

முடக்கநிலை காலத்தில் இதுவரையில் தபால் துறை சேமிப்பு வங்கி (பி.ஓ.எஸ்.பி.) மூலம் 34 லட்சம் பரிவர்த்தனைகளும், இந்தியா போஸ்ட் பட்டுவாடா வங்கி (ஐ.பிபிபி.) மூலம் 6.5 லட்சம் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Posted On: 01 APR 2020 6:34PM by PIB Chennai

முடக்கநிலை அமலில் உள்ள சூழ்நிலையில், 31.03.2020 வரையிலான காலத்தில் தபால் துறை சேமிப்பு வங்கி (பி.ஓ.எஸ்.பி.) மூலம் 34 லட்சம் பரிவர்த்தனைகளும், இந்தியா போஸ்ட் பட்டுவாடா வங்கி (ஐ.பிபிபி.) மூலம் 6.5 லட்சம் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பதிவு செய்யப்படும் தபால் சேவைகள் என்ற வகையில், துரித அஞ்சல், பதிவுத் தபால்கள், பார்சல்கள் மற்றும் மணியார்டர்கள் போன்றவற்றில் சுமார் 2 லட்சம் சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன.

வென்டிலேட்டர்கள், கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை உபகரணத் தொகுப்புகள் மற்றும் இதர மருத்துவ சாதனங்களை கொண்டு செல்லும் சேவையிலும் தபால் துறை ஈடுபட்டுள்ளது. புதுவையில் இருந்து ஒடிசா அரசு மருத்துவக் கார்ப்பரேஷன் மற்றும் குஜராத் மருத்துவ கார்ப்பரேஷனுக்கு வென்டிலேட்டர்கள் தபால் துறை மூலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. மெட்ரோ நகரங்கள் மற்றும் வேறு சில பகுதிகளுக்கு மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்காக ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்களும் இந்தியா போஸ்ட் சேவையை நாடியுள்ளன.

பஞ்சாயத்து செயலாளர், டெலிமருத்துவ மையங்கள், கிராம அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புவதற்கான டெலிகிராம் குரூப்களும், ஹெல்ப்லைன் எண்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1610111



(Release ID: 1610193) Visitor Counter : 134