அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 தொற்று குறித்த விழிப்புணர்வைப் பரப்ப டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) நடவடிக்கை

Posted On: 01 APR 2020 11:36AM by PIB Chennai

கோவிட் 19 தொற்று குறித்த கற்பனைக் கதைகளை விடுத்து, அதன் பின்னணியில் உள்ளபொது சுகதார நடவடிக்கை குறித்த அடிப்படை அறிவியல் புரிதலை ஏற்படுத்த, விறுவிறுப்பான, ஒளிறும் தொடர்பு பொருள்கள் கொண்ட ஒரு தொகுப்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கோவிட் 19 பரவலைத் தடுக்க சமூக இடைவெளி ஏன் உதவிகரமாக இருக்கிறதென்பதை விளக்கும் பன்மொழி சாதனங்களை (யூ டியூப் காணொளிகள்) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளார்கள். ஹாரி ஸ்டீவென்ஸ், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிட்ட அசல் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த காணொலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

" கல்வியாளர்கள், குடும்பங்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் தன்னார்வ முயற்சிகளின் மூலம் ஆங்கிலம், இந்தி, வங்காளம், கொங்கனி, மராத்தி, மலையாளம், ஒடியா, தமிழ், தெலுங்கு ஆகிய ஒன்பது மொழிகளில் நாங்கள் இதை வெளியிட்டுள்ளோம்," என்கிறார் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி, பேராசிரியர் அர்னாப் பட்டாச்சார்யா. மேலும் குஜராத்தி, பஞ்சாபி, ஹரியான்வி அஸாமி மொழிகளிலும் இந்த காணொலி விரைவில் வெளியிடப்படும்.

கோவிட் 19 தொற்று குறித்து வலம் வரும் பல்வேறு கற்பனைக் கதைகளைக் களைந்து சரியான தகவலைத் தெரியப்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும். அதிக பார்வையாளர்களை சென்றடைவதற்காக, எளிதாக புரியும் வகையிலும், பிராந்திய மொழியிலும் இந்தத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. "இந்த நோய் வெளிநாட்டில் உருவாகி இருந்தாலும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற படி நம் மக்களுக்கு இதை விளக்க வேண்டும். அதற்கு பிராந்திய மொழி உள்ளடக்கம் முக்கியம். இந்த தொகுப்பை உபயோகப்படுத்தவதன் மூலம் மக்கள் மத்தியில் சிறப்பான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என நாங்கள் நம்புகிறோம்," என்கிறார் பட்டாச்சார்யா.

அடுத்த கட்டமாக, வீடுகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு முகக்கவசங்களை தயார் செய்ய இந்தக் குழு முயற்சி செய்கிறது. இதற்கான சுவரொட்டிகளும் காணொலிகளும் விரைவில் வெளியிடப்படும். தவறான தகவல்களைக் களைந்து, இந்த வைரஸின் பின்னே உள்ள அறிவியலை விளக்க, விஞ்ஞானிகள் பொதுமக்களுடன் சமூக ஊடகம் மூலம் கலந்துரையாடும் 'சாய் அன்டு ஒய்' ('Chai and Why') நிகழ்ச்சி, டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மக்களை சென்றடையும் நடவடிக்கையாகும்.

*****



(Release ID: 1609868) Visitor Counter : 162