எரிசக்தி அமைச்சகம்
கொவிட்-19ஐ முறியடிக்க , பிரதமர் கேர்ஸ் நிதிக்கு மின்சார நிதிக் கழகம், தனது சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ரூ.200 கோடி வழங்கியுள்ளது
Posted On:
31 MAR 2020 8:17PM by PIB Chennai
கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மத்திய எரிசக்தி அமைச்சகத்துக்கு உட்பட்ட வங்கி சாராத பிரபல நிதி நிறுவனமான, மின்சார நிதிக்கழகம், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதிக்கு ( பிரதமர் கேர்ஸ் நிதி) ரூ.200 கோடி நன்கொடை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, இந்த நிறுவனம், ராஜஸ்தான் இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டிருந்தது. பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் இந்த நிதி, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் விநியோகத்துக்குப் பயன்படுத்தப்படும்.
(Release ID: 1609826)
Visitor Counter : 128