நிதி அமைச்சகம்

ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2வது அவரசக் காணொளிக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 31 MAR 2020 8:15PM by PIB Chennai

கொவிட்-19 பெரும் பரவல் உலகப் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்தும், இந்த உலகளாவிய சவாலை ஒருங்கிணைந்த முயற்சிகளால் எதிர்கொள்வது குறித்தும் சவுதி அரேபியா தலைமையில் இன்று நடைபெற்ற ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2வது அவரசக் காணொளிக் கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

ஜி20 உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமில்லாது, ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கும் வழிவகுக்கும் இது போன்ற கூட்டங்களை நடத்துவதற்காக சவுதி அரசை நிதி அமைச்சர் பாராட்டினார்.

கொவிட்-19 எதிர்கொள்வதற்கு, ஜி20 நிதி அமைச்சர்களும், மத்திய வங்கி ஆளுநர்களும், சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, ஒரு ஜி20 செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் போது தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஜி20 செயல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த திருமதி. நிர்மலா சீதாராமன், இந்த நடவடிக்கை ஒரு நாட்டின் அனுபவத்திலிருந்து இன்னொரு நாடு கற்றுக்கொள்வதற்கும், முக்கிய அறிவு பூர்வமான பார்வைக்கும் வாய்ப்பைத் தரும் எனத் தெரிவித்தார். ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஜி20 தலைவர்களின் அறிக்கை குறித்து பேசிய அவர், பொருளாதாரத்தைத் தொடர்ந்து ஆதரித்து, விரைவில் சரிசெய்யும் வகையில் நிதி அமைப்பை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அனைத்துலக நாணய நிதிய (International Monetary Fund) கருவித்தொகுதியை (tool kit) மேம்படுத்துதல், இடமாற்ற வலைப்பின்னலை விரிவுபடுத்துதல் குறித்து குறிப்பிட்ட  சில குறுக்கீடுகளை நிதி அமைச்சர் செய்தார்.

பரிமாற்ற ஏற்பாடுகள் குறித்து பேசிய திருமதி. நிர்மலா சீதாராமன், உறுப்பு நாடுகளுக்கு எப்போது தேவையோ அப்போது செயல்படுத்தக்கூடிய வகையில் களங்கமற்ற ஒரு குறுகிய கால நிதி பரிமாற்ற வசதியை, தன்னுடைய வளங்களை பயன்படுத்தி உருவாக்குமாறு, அனைத்துலக நாணய நிதியத்திற்கு ஊக்கமூட்டினார். தேவைகளுக்கேற்ற புது விதமான இருதரப்புப் பரிமாற்ற ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொள்ள நாடுகளுக்கு நெகிழ்வுத் தன்மையை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

***


(रिलीज़ आईडी: 1609812) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu