வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2015-2020 ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது

Posted On: 31 MAR 2020 8:53PM by PIB Chennai

இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் (Foriegn Trade Policy) மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் இன்று மாறுதல்களை அறிவித்துள்ளது. 2015 ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த இப்போதைய கொள்கை, 2020 மார்ச் 31 வரையிலான காலம் வரையில் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருந்தது. புதிய கோவிட்-19 நோய்த் தாக்குதல் காரணமாக எழுந்துள்ள முன் எப்போதும் இல்லாத சூழ்நிலையில், பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் நிவாரணங்களைத் தொடர்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கொள்கையை மேலும் ஓராண்டு காலத்துக்கு, அதாவது 2021 மார்ச் 31 ஆம் தேதி வரையில் நீட்டிப்பதன் மூலம் இந்தச் சலுகைகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் வர்த்தகத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு மற்ற நிவாரணங்களை பின்வரும் இணையதள சுட்டியில் அறிந்து கொள்ளலாம். https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1609704

 

******(Release ID: 1609805) Visitor Counter : 116


Read this release in: English , Hindi , Bengali , Assamese