ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 11 பிப்ரவரி 2020 தேதியிட்டு அறிவிக்கை செய்யப்பட்டவாறு, 2020 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து மருந்துகள் என அறிவிக்கை செய்யப்பட்ட மருத்துவ சாதனங்கள், ரசாயன மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை 2013-ன் வரம்புக்கு உள்பட்டவையாக இருக்கும்

Posted On: 31 MAR 2020 8:04PM by PIB Chennai

ரசாயன மருந்துகள் , அழகுசாதனப் பொருள்கள் சட்டம் 1940 மற்றும் ரசாயன மருந்துகள் , அழகுசாதனப் பொருள்களுக்கான விதிகள் 1945இன் கீழ் ரசாயன மருந்துகள் என அறிவிக்கை செய்யப்பட்ட / ஒழுங்குபடுத்தப்பட்ட 24 வகையான மருத்துவ சாதனங்களை அரசு ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது. இவற்றில், 4 மருத்துவ சாதனங்கள், அதாவது (i) இருதய ஸ்டென்ட்கள் (ii) மருந்தை உமிழும் ஸ்டென்ட்கள் (iii) ஆணுறைகள் மற்றும் (iv) பெண்களின் கருப்பையில் பொருத்தும் கருத்தடை சாதனம் (Cu-T) ஆகியவை, அதிகபட்ச விலை நிர்ணயத்துக்கு உரிய மருத்துவ சாதனங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த 4 மருத்துவ சாதனங்களும் விலைக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வருகின்றன. ரசாயன மருந்துகள் என்று அறிவிக்கை செய்யப்பட்ட / ஒழுங்குபடுத்தப்பட்ட பட்டியலிடப்படாத மீதி மருத்துவ சாதனங்களைப் பொருத்தவரை, டி.பி.சி.ஓ. 2013இன் பத்தி 20-ன் கீழ் அதிகபட்ச விலைகளை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வருகிறது. முந்தைய 12 மாதங்களில் இருந்ததைவிட 10 சதவீதத்துக்கும் அதிகமாக அவற்றின் விலைகளை உற்பத்தியாளர் / இறக்குமதியாளர் உயர்த்திவிடாமல் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.



(Release ID: 1609802) Visitor Counter : 236