ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பட்டியலிடப்பட்ட மருந்துகளுக்கு அதிகபட்ச விலை திருத்தியமைப்பு

Posted On: 31 MAR 2020 8:26PM by PIB Chennai

ரசாயன மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை 2013இன் விதிகளின்படி, பட்டியலிடப்பட்ட வகையைச் சேர்ந்த 883 மருந்துகளின் அதிகபட்ச விலைகளை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (The National Pharmaceutical Pricing Authority - NPPA) திருத்தி அமைத்துள்ளது / உயர்த்தியுள்ளது.

இந்த ஆணையத்தின் கூட்டம் 31.03.2020ல் நடந்தபோது, கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஏ.பி.ஐ.களில் ஏற்பட்ட வழங்கல் தடைகள் நீங்கி இப்போது இயல்புநிலை திரும்பி வருவது குறித்து திருப்தி தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் மருந்துகளுக்கான கச்சா பொருள்களின் விலையில் அசாதாரணமாக ஏற்ற இறக்கம் எதுவும் இல்லை என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இயல்பான விலை திருத்தியமைப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டது.

மருந்து வகைகளின் அதிகபட்ச விலைகள் திருத்தியமைத்தலில், இருதயக் கோளாறுக்கான ஸ்டென்ட்களின் அதிகபட்ச விலைகளும் அடங்கும். திருத்தியமைக்கப்பட்ட விலைகள் 2020 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும். திருத்தப்பட்ட விலைகளின் விவரங்கள்  www.nppaindia.nic.in என்ற என்.பி.ஏ.ஏ.-வின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.


(Release ID: 1609801) Visitor Counter : 104
Read this release in: English , Urdu , Hindi , Telugu