பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பால் எழுந்துள்ள சூழலில் கார்ப்பரேட் திவால் நிலை தீர்வு நடைமுறையில் நிவாரணம் அளிப்பதற்கான சி.ஐ.ஆர்.பி. விதிமுறைகளை ஐ.பி.பி.ஐ. திருத்தியுள்ளது

Posted On: 30 MAR 2020 5:23PM by PIB Chennai

கோவிட்-19 காரணமாக முடக்கநிலை அமலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பெரு நிறுவனங்கள் திவால் தீர்வு வழிமுறை -சி.ஐ.ஆர்.பி. (Corporate Insolvency Resolution Process) ஒழுங்குமுறைகளை  இந்திய திவால் மற்றும் கடன் முறி போர்டு (Insolvency and Bankruptcy Board of India - IBBI) திருத்தியுள்ளது. கோவிட்-19 பரவலின் தொடர்ச்சியாக மத்திய அரசு அமல் செய்துள்ள முடக்கநிலைக் காலம் இதற்கான வரையறைக்குள் சேர்த்துக் கணக்கிடப்படாது என்ற வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளது. கார்ப்பரேட் திவால் தீர்வு நடைமுறை தொடர்பாக இந்த நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இருந்தபோதிலும் இந்த நடைமுறைகளில் அளிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த காலவரம்புக்கு உட்பட்டதாக இது இருக்கும்.

இந்திய திவால் மற்றும் கடன் முறி போர்டு (கார்ப்பரேட்களுக்கான திவால் தீர்வு நடைமுறை) விதிகள், 2016 (சி.ஐ.ஆர்.பி. ஒழுங்குமுறைகள்) IBBI 2020 மார்ச் 29 ஆம் தேதி திருத்தம் செய்தது.



(Release ID: 1609322) Visitor Counter : 188