உள்துறை அமைச்சகம்

கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் கடமையில் இருந்து தவறியதாக தில்லி தேசியத் தலைநகர் பிராந்திய அரசு அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை

Posted On: 29 MAR 2020 10:25PM by PIB Chennai

கொவிட்-19  பரவுவதைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் பணியைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்ற 2005-ம் ஆண்டின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட தேசிய நிர்வாகக் குழுத் தலைவரின் அறிவுறுத்தலைப் பின்வரும் அதிகாரிகள், பின்பற்றத் தவறியதற்கு முதல் நோக்கிலேயே ஆதாரம் உள்ளதால், இதுகுறித்து  உரிய மேலிட அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

கொவிட்-19க் கட்டுப்படுத்துவது தொடர்பான பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நிலவும் சூழலில், இந்த அதிகாரிகள் பொது சுகாதாரம் மற்றும்  பாதுகாப்பை உறுதி செய்யத் தவறி விட்டனர். பின்வரும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் நிலவிய குளறுபடிகள் காரணமாக, மேலிட அதிகாரி, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

1. கூடுதல் தலைமைச் செயலர், போக்குவரத்து துறை, தேசியத் தலைநகர் பிராந்திய அரசு, தில்லி- உடனடி தற்காலிகப் பணிநீக்கம்

2. கூடுதல் தலைமைச் செயலர், உள்துறை மற்றும் நில கட்டிடத்துறை, தேசியத் தலைநகர் பிராந்திய அரசு, தில்லி-  விளக்கம் கேட்டு நோட்டீஸ்

3. முதன்மைச் செயலர். நிதித்துறை, தேசியத் தலைநகர் பிராந்திய அரசு, தில்லி & கோட்ட ஆணையர், தேசியத் தலைநகர் பிராந்திய அரசு, தில்லி- உடனடி தற்காலிகப் பணிநீக்கம்

4. துணைக் கோட்ட மாஜிஸ்திரேட் ,சீலாம்பூர்- விளக்கம் கேட்டு நோட்டீஸ்.

*****


(Release ID: 1609206) Visitor Counter : 119