ரெயில்வே அமைச்சகம்

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் முழு முடக்க காலம் முழுவதும் இன்றியமையாத பொருள்களை சிறிய பார்சல்களாக எடுத்துச் செல்வதற்கு சிறப்பு பார்சல் ரெயில்களை இந்திய ரெயில்வே இயக்கும்

Posted On: 29 MAR 2020 5:20PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றுக் காலத்தில் தடை இல்லாமல் சீராக, சரக்குகள் மற்றும் இன்றியமையாத பொருள்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்திய ரெயில்வே தனது தடையில்லா பார்சல் ரெயில்கள் சேவைகளை வழங்குகிறது.  நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இன்றியமையாத பொருள்களையும், மற்ற சரக்குகளையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்வதற்கு இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன.  கோவிட்-19 தொற்றுக்கு எதிரான முழு முடக்க காலகட்டத்தில் மருந்து பொருள்கள், மருந்து உபகரணங்கள், உணவுப் பொருள்கள் முதலான இன்றியமையாத பொருள்களை சிறிய பார்சல்களாக எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம் ஆகும்  இந்த மிக முக்கியமான தேவையை நிறைவேற்றும் வகையில் இந்திய ரெயில்வே தனது ரெயில்வே பார்சல் வேன்களை வழங்குகின்றது.  இந்த பார்சல் வேன்கள் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும், மாநில அரசுகள் உள்ளிட்ட ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் நாடு முழுவதும் இத்தகைய சரக்குகளை எடுத்துச் செல்ல கிடைக்கும். முழு முடக்க காலகட்டத்தின் போது நாட்டில் பொருள்கள் மற்றும் சரக்குகள் எடுத்துச் செல்வதில் ஏற்படக்கூடிய தடைகளை ஏற்கனவே உள்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு பார்சல் ரெயில்கள் மற்றும் வெகு விரைவு போக்குவரத்து ரெயில்கள் வழங்கப்படுவது என்பது சரக்கு விநியோகத் தொடரை மேலும் திறம்படச் செயல்பட வைக்கும். சிறப்புப் பார்சல் ரெயில்களை இயக்குவது என்ற முடிவு சிறிய அளவுகளில் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கும். பால் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மளிகைப் பொருள்கள், சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லவும் இவை உதவியாக இருக்கும். 

தெற்கு ரெயில்வேயின் பார்சல் சிறப்பு ரெயில்கள் கீழ்க்கண்ட பாதைகளில் இயக்கப்படும்:

  1. கோயம்புத்தூர் – பட்டேல் நகர் (தில்லி பிராந்தியம்) – கோயம்புத்தூர்
  2. கோயம்புத்தூர் – ராஜ்கோட் – கோயம்புத்தூர்
  3. கோயம்புத்தூர் – ஜெய்ப்பூர் – கோயம்புத்தூர்
  4. சேலம் – பத்திந்தா


(Release ID: 1609116) Visitor Counter : 175