வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில் பாதுகாப்புத்தள இணைய தளத்தை ஒரே வாரத்தில் 1.75 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.

கோவிட்-19 தொற்றுக்கு இந்தியா எடுத்து வரும் உடனடி நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தொழில்துறையினர் பெற இத்தளம் உதவுகிறது.

Posted On: 29 MAR 2020 12:10PM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தேசிய முதலீட்டு மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இன்வெஸ்ட் இந்தியா இணையதளத்தில் இயங்கும் இந்திய முதலீட்டு தொழில் பாதுகாப்பு தளம்  கோவிட்19 தொற்றுக்கு இந்தியா எவ்வாறு துரிதமாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பது குறித்த உடனடி தகவல்களை தொழில்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் பெற வசதியாக இருக்கிறது இந்த வர்த்தகதளம். 21 மார்ச், 2020 அன்று தொடங்கப்பட்ட இந்த தளம், இன்று காலை 10 மணி வரை 50க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 1.75 லட்சத்துக்கும் அதிகமானபார்வையாளர்களை ஈர்த்துள்ளது. 423 அரசு அறிவிப்புகள் மற்றும் அறிவிக்கைகளை கொண்டுள்ள இந்த தளம், 205 வலைப்பதிவுகள், தகவல் படங்கள், காணொலிகள் மற்றும் இதர தகவல்களையும் கொண்டுள்ளது. கோவிட்டுக்கான நன்கொடைகள்தான் இந்த தளத்தில் அதிகம் தேடப்பட்ட தகவலாகும்.

கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கும் துறை வல்லுனர்களின் அர்ப்பணிப்பானபங்களிப்போடு செயல்படும் இந்ததொழில் பாதுகாப்புத் தளம், தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்களைக் களைவதில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் சந்தேகங்களை களைவதற்கும், பதிலளிப்பதற்கும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியுடன் (சிட்பி) இணைந்து செயல்படும் என்று இன்வெஸ்ட் இந்தியா அறிவித்துள்ளது.


(Release ID: 1609026) Visitor Counter : 144