வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பொருள்கள் மற்றும் சேவைகளை அரசுத் துறைகள் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மின்னணு சந்தை (GeM) எடுத்துள்ளது
Posted On:
28 MAR 2020 12:07PM by PIB Chennai
வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நோக்கு முகமையான அரசு மின்னணு சந்தை (Government e-Marketplace (GeM)), கொவிட் 19 பரவல் நோய்க்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. துடிப்பான, சுய சார்பான, பயனாளிகளுக்கு எளிதான ஒரு இணையதளத்தை நடத்தி வரும் அரசு மின்னணு சந்தை பொருள்கள் மற்றும் சேவைகளை அரசு அலுவலகங்கள் வாங்குவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த தேவையான காலகட்டத்தில் விரைவாகவும், திறமையாகவும், வெளிப்படையாகவும் குறைந்த விலையிலும் அரசு மின்னணு சந்தையில் பொருட்கள் வாங்குவதற்கு, அரசு விதிகளில் தேவையான மாற்றங்களை செய்யப்பட்டு அவை பொது நிதி விதிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வருமாறு:
1. கொவிட் 19 தொடர்பான பிரிவுகளுக்கென்றே பிரத்யேகமாக ஒரு பக்கம் (https://gem.gov.in/covid19) அரசு மின்னணு சந்தை இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
2. ஏற்கனவே உள்ள 32 பிரிவுகளுடன், மருத்துவ விநியோகத்துக்காக பின்வரும் பிரிவுகள் அரசு மின்னணு சந்தையில் உருவாக்கப்பட்டுள்ளன:
அ. நாவல் கொரொனா வைரஸ் (கொவிட் 19) மாதிரி சேமிப்பு பெட்டி
ஆ. மீண்டும் பயன்படுத்தக்கூடிய வினைல்/ரப்பர் கையுறைகள் (சுத்தப்படுத்துதல்)
இ. கண் பாதுகாப்பு (கவசம்/கண்ணாடி)
ஈ. மீண்டும் பயன்படுத்த முடியாத வெப்பமானிகள் (தெர்மாமீட்டர்)
உ. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய துண்டுகள் (டவல்)
ஊ. நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக (ஸ்டெரிலைசேஷன்) புற ஊதா டியூப் லைட்
எ. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்நடப்படும் அறுவை சிகிச்சைக்கான முகக் கவசம்
ஏ. மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இயந்திரம்
3. ஏற்கனவே உள்ள 52 பிரிவுகள் மற்றும் 7 சேவைகளுடன், பின்வரும் பிரிவுகள் துணை விநியோகங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன:
அ. பொதுப் பயன்பாடு கருவிகள் பெட்டி
ஆ. பிரத்யேகமாக செய்யப்பட்ட அலுமினியப் பாத்திரங்கள்
4. இதனுடன், நிதி ஆயோக்கால் மருத்துவ மற்றும் துணை விநியோகங்களில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பிரிவுகளும் தற்போது அரசு மின்னணு சந்தையில் உள்ளன. மேற்கணட பிரிவுகளுக்கான அனைத்து தயாரிப்பாளார்கள், மறுவிற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அரசு மின்னணு சந்தையில் இணைந்துகொள்வதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
5. தற்போதைய நிலவரப்படி அரசு மின்னணு சந்தையில் உள்ள கொவிட் 19 தொடர்புடைய பிரிவுகள் வருமாறு:
மொத்தம்: 173
மருத்துவ தொடர்புடையது: 120
துணை பொருட்கள்: 53
மருத்துவ மற்றும் துணை பொருள்கள் விநியோகத்துக்கான விரிவான பட்டியல் இணைப்பு 1 மற்றும் இணைப்பு 2இல் முறையே சேர்க்கப்பட்டுள்ளன.
6. கொவிட் 19 தொடர்புடைய பொருள்களை எளிதாக வாங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காலம் மற்றும் நிலவரம் வருமாறு:
i. குறிப்பிட்ட பிரிவுகளுக்காக குறுகிய கால ஏலம் மற்றும் குறைக்கப்பட்ட விநியோக நேரம். 10 நாட்களாக இருந்த ஏலச் சுழற்சி, கொவிட் 19 தொடர்புடைய பிரிவுகளுக்காக 3 நாட்களாக குறைக்கப்பட்டது. பொருள்களின் அவசரத் தன்மையை கருத்தில் கொண்டு, அந்த பொருள்கள் வந்தடையும் நேரத்தை வாங்குவோர் 2 நாட்களாக குறைத்துக் கொள்ளலாம்.
Filter for Delivery Lead Time selection by buyer in L1 buying. Will be live by 1 April 2020
ii. 'எல் 1' வாங்குவதில், வாங்குவோரால் டெலிவரி லீட் நேரத் தேர்வில் ஃபில்டர், (Filter for Delivery Lead Time selection by buyer in L1 buying) ஏப்ரல் முதல் தேதி இருந்து அமல்.
iii. கொவிட் தொடர்பான பிரிவுகளில் பொருள்/பிராண்ட் ஒப்புதலுக்கு முன்னுரிமை. 28 மார்ச் 2020ல் இருந்து அமல்.
iv. விலை உயர்வைத் தடுக்க புது வியாபார விதி. 1 ஏப்ரல் 2020ல் இருந்து அமல்.
v. அசல் விநியோக காலம் காலாவதியான 30 நாட்களுக்குப் பிறகும், விநியோக காலத்தை மேலும் நீட்டித்தல். 28 மார்ச் 2020ல் இருந்து அமல்.
vi. குறிப்பிட்ட பிரிவுகளில், அறிவிக்கை வெளியிடப்பட்ட 48 மணி நேரத்துக்குள் சரக்கு விவரங்களை புதுப்பிக்காத விற்பனையாளர்களை நீக்க புது வியாபார விதி. இது ஏற்கனவே அமலில் உள்ளது.
vii. கொவிட் 19 பிரிவுகள் மற்றும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையை கண்காணிக்க புதிய இணைய பக்கம். 28 மார்ச் 2020ல் இருந்து அமல்.
7. கொவிட் 19 பதிலடி திட்டத்துக்காக, அரசு மின்னணு சந்தையில் வாங்கும் அளவை உலக வங்கி ரூ.1 லட்சம் டாலரில் இருந்து ரூ1 மில்லியன் டாலருக்கு உயர்த்தியுள்ளது.
8. விற்பனையாளர் இணைத்தல்:
அ. புதிய கொவிட் வகையின பொருள்களுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆ. தேவையான மருத்துவப் பிரிவுகள் அரசு மின்னணு சந்தைக்குள்ளும் வெளியிலும் தேடப்பட்டன. தயாரிப்பாளர்கள் உட்பட ஏறத்தாழ 10,000 விற்பனையாளர்களை நோக்கி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. அந்த அஞ்சலில், கொவிட் 19 வகையினங்கள், பிராண்ட் மற்றும் பொருள்கள் ஒப்புதல் முறையிலும், விற்பனையாளர்களை வேகமாக சேர்த்தலிலும் அரசு மின்னணு சந்தை அறிமுகப்படுத்தியுள்ள முன்னுரிமைகள் குறித்து விளக்கப்பட்டன.
இ. தொலைபேசி மூலமாகவும் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் தொடர்பு கொள்ளப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட அப்படிப்பட்ட விற்பனையாளர்கள் தொடர்பில் உள்ளார்கள். அவர்களுக்கு அரசு மின்னணு சந்தை உருவாக்கியுள்ள கொவிட் 19 பிரிவுகள் குறித்து விளக்கப்பட்டதோடு, இதில் இணையுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். தங்கள் மறுவிற்பனையாளர்களை இணைய செய்யுமாறு தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதோடு, தேவையான இருப்புகளை வைத்துக்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டனர்.
ஈ. தற்போதைய நிலைமையை ஒரு வாய்ப்பாக கருதுமாறு தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டதோடு, இந்த தேசிய அவசரத்துக்கு தேவைப்படும் விஷயங்களுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்குமாறு ம்கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
உ. பிராந்தியங்களில் உள்ள வியாபாரப் பிரதிநிதிகளிடம் தொடர்பில் இருக்குமாறு அரசு மின்னணு சந்தைக்கு வெளியில் இருக்கும் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஊ. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவுகள், விலக்களிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து தயாரிப்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. https://www.ndma.gov.in/en/ என்னும் சுட்டியும் பகிரப்பட்டது.
எ. பிராண்ட் ஒப்புதல் மற்றும் பொருள் ஒப்புதல் குறித்து தயாரிப்பாளர்கள்/விற்பனையாளர்களிடம் வந்த கோரிக்கைகளுக்கு உட்சபட்ச முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதே நாளில் ஒப்புதல் அளிக்கப்பட்டன
இணைப்பு 1
மருத்துவ விநியோகப் பிரிவுகளின் பட்டியல்
வ. எண் பொருள்
1. வென்டிலேட்டர்கள்
2. ஆல்கஹால் சார்ந்த கை துடைப்பான்
3. முகக் கவசம் (கண், மூக்கு & வாய் பாதுகாப்பு)
4. என் 95 கவசங்கள்
5. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய லேடெக்ஸ் கையுறைகள் (மருத்துவம்)
6. மறுபடி பயன்படுத்தக்கூடிய வினைல்/ரப்பர் கையுறைகள் (சுத்தமாக்குதல்)
7. கண் பாதுகாப்பு (கவசம்/கண்ணாடி)
8. பாதுகாப்பு அங்கிகள்
9. மீண்டும் பயன்படுத்த முடியாத வெப்பமானிகள் (தெர்மாமீட்டர்)
10. நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக (ஸ்டெரிலைசேஷன்) புற ஊதா டியூப் லைட்
11. மருத்துவ முகக் கவசம் (அறுவை சிகிச்சை/செயல்பாடு)
12. டிடெர்ஜென்ட்/கிருமிநாசினி
13. டிடெர்ஜென்ட்/கிருமிநாசினி
14. டிடெர்ஜென்ட்/கிருமிநாசினி
15. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய துண்டுகள் (டவல்)
16. உயிரி அபாயப் பைகள்
17. சக்கர நாற்காலி
18. ஸ்ட்ரிப்சுடன் கூடிய குளூக்கோ மீட்டர்
19. வலுவாக பதப்படுத்தப்பட்ட ஜெல் பேக்குகள்
20. மாதிரி சேகரிப்புப் பெட்டி
21. தெர்மோகூல் பெட்டி/ ஐஸ் பெட்டி
22. ஸ்டிரெட்சர்
23. தெர்மல் ஸ்கேனர்
24. தெர்மல் ஸ்கேனர்களுக்கு தேவைப்படும் பேட்டரிகள்
25. ரத்த அழுத்த சோதனை இயந்திரம்
26. ஐவி செட்டுகள்
27. ஐவி கன்னுலா
28. ஐவி ஸ்டேண்டு
29. அவசர ஊர்தி
30. முதல் உதவி
31. மருத்துவக் கழிவு எரிப்பான்
32. அவசர சிகிச்சைப் பிரிவு மெத்தைகள்
33. இதய சோதனைக் கருவிகள்
34. ஊசி பம்ப்புகள்
35. கையடக்க எக்ஸ் ரே இயந்திரங்கள்
36. என்டோட்ராச்சியல் டியூப்
37. சக்ஷன் டியுப்
38. ஆக்சிஜன் உருளைகள்
இணைப்பு 2
துணை விநியோகப் பிரிவுகளின் பட்டியல்
வ.எண் பொருள்
1. சோப்பு
2. ரப் ஹால் டென்ட்டுகள்
3. நாற்காலிகள்/நீண்ட இருக்கைகள்
4. மேஜைகள்/டெஸ்குகள்
5. பிரின்டர்
6. கணினி
7. விரிவாக்கப் பலகைகள்
8. தீப்பெட்டிகள்
9. மெழுகுவத்திகள்
10. நோயாளிகளுக்கான அடையாள அட்டை
11. தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டை
12. தகவல் கையேடு
13. வெள்ளை பலகை/மார்க்கர்கள்
14. குப்பை பைகள்/தொட்டிகள்
15. குடி தண்ணீர் + டிஸ்பென்சர் (4)
16. தூய்மை பொருள்கள் (துடைப்பங்கள்)
17. தூய்மை பொருட்கள் (மாப்புகள்)
18. தீ அணைப்பான்
19. e கழிவறை
20. ஜென்செட்/பேக் அப்
21. விசில்
22. அடிப்படை கருவி செட்
23. பதிவுத் தகவல்கள் ஸ்டிக்கர்/ப்ரின்டர்
24. மெத்தைகள்
25. மடிக்கக்கூடிய கட்டில்கள்/மெத்தைகள்
26. மெத்தை விரிப்பான்
27. தலையணைகள்
28. தலையணை கவர்கள்
29. துண்டுகள்
30. ரப்பர் ஷீட்டுகள்
31. போர்வைகள்
32. அவசர விளக்கு
33. லான்ட்ரி (டிடெர்ஜென்டுகள்)
34. சிறிய குளிர்சாதனப் பெட்டி
35. எண்களுடன் கூடிய டோக்கன்கள்
36. கொசு விரட்டி
37. தூய்மைத் துணி
38. குழந்தைகளுக்கான டையப்பர்கள்
39. ஸ்டீல் தட்டுகள்
40. ஸ்டீல் கிளாசுகள்
41. ஸ்பூன்கள்
42. ஜக்குகள்
43. அடுப்பு பெரியது
44. பெரிய பாத்திரங்கள்
45. பக்கெட்டுகள்
46. மக்குகள்
47. டிஷ்யூ காகிதம்
48. சிறிய தொட்டிகள்
49. காகிதம்
50. பேனா
51. ஸ்டாப்ளர்
52. ஸ்டாப்ளர் பின்கள்
53. பாக்ஸ் ஃபைல்
54. லெட்டர்ஹெட்
**************
(Release ID: 1608897)
Visitor Counter : 294